திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1965 | பெரிய திருமொழி || (11-2–குன்றமெடுத்து) - (தலைவி பிரிவு ஆற்றாத வருந்திக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவருடைய ஐஸ்வர்ய பிரகாசமான திருவடிகளை அனுசந்திக்கும் போது எல்லாம் – கறுத்த தன்மையை உடைத்தாய் இருக்கிற கடல் ராத்ரியிலே என் எளிமை கண்டு மிகைத்து கூப்பிடா நிற்கும் – அதுக்கு மேலே –நான் வருந்தும் படியாக பலவானாய் இருக்கிற வாடையானது வாரா நின்றது – ஓர் அபலை இதுக்கு கடகிடவோ) 4 | பொருந்து மா மரம் ஏழு எய்த புனிதனார்
திருந்து சேவடி என் மனத்து நினைதொறும்
கரும் தண் மா கடல் கங்குல் ஆர்க்கும் அதுவன்றி
வருந்த வாடை வரும் இதற்கு இனி என் செய்கேன் –11-2-4 | பதவுரை Show / Hideபொருந்து, Porundhu - தம்மில்தாம் பொருந்திநின்ற மாமரம் ஏழும் எய்த, Mamaram Ezham Eytha - பெரிய ஸாலவ்ருக்ஷங்களேழையும் அம்புசெலுத்தித் துளைபடுத்தின புனிதனார், Punithanar - பரமபாரிசுத்தரான பெருமாளுடைய திரு உந்து, Thiru Unthu - ஐச்வர்ய ப்ரகாசமான சே அடி, Sae Adi - திருவடிகளை என் மனத்து, En Manathu - என் நெஞ்சிலே நினை தொறும், Ninai Thorum - அநுஸந்திக்கும் போதெல்லாம் கரு தண்மா கடல், Karuthu Thanma Kadhal - கறுத்துக் குளிர்ந்து பெரிதான கடலானது கங்குல், Kangul - இரவுமுற்றும் ஆர்க்கும், Aarkkum - ஆரவாரிக்கும் அது அன்றியும், Athu Anriyum - அதுவுந் தவிர வாடை, Vadai - வாடைக் காற்றும் வருந்த, Varuntha - நான் பரிதபிக்கும்படியாக வரும், Varum - வந்து வீசுகின்றது இதற்கு, Idharku - இதற்குப் பாரிஹாரமாக இனி என் செய்கேன், Ini En Seyken - இனி என்ன பண்ண வல்லேன் |