திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1960 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1960பெரிய திருமொழி || (11-1–குன்றமொன்) - (பிரிவு ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அநந்ய பிரயோஜனரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் இட்ட திருத் துழாயில் பரிமளத்தை வண்டு கொண்டு வந்து ஊதுமாகில் – மிக்க சீர் தொண்டர் இட்ட -என்பான் என் என்னில் –அங்குத்தைக்கு பரிவர் உண்டு -என்று அறிந்தால் இறே இவளுக்கு கண் உறங்குவதும்-பழைய நிறம் வருவதுவும் – அநந்ய பிரயோஜாரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் அங்குத்தைக்கு பரியா நின்றார்கள் என்று கேட்ட வாறே இனி நமக்கு ஒரு குறை இல்லை என்று கண் உறங்கா நிற்கும்-நிறமும் பழைய படியேயாம்) 9
கெண்டை ஒண் கண்ணும் துயிலும் எந்நிறம் பண்டு பண்டு போல் ஒக்கும் மிக்க சீர் தொண்டரிட்ட பூம் துளவின் வாசமே வண்டு கொண்டு வந்தூதும் ஆகிலே –11-1-9
பதவுரை Show / Hide
மிக்க சீர் தொண்டர், Mikka Seer Thondar - அநந்யப்ரயோஜநரான ஸ்ரீ வைஷ்ணவாக்ள்
இட்ட, Itta - ஸமர்ப்பித்த
பூ துளவின், Poo Thulavin - திருத்துழாய் மலரின்
வாசம், Vaasam - பரிமளத்தை
வண்டு, Vandu - வண்டானது
கெண்டை, Kendai - கெண்டை மீன்போன்று அழகிய
ஒண் கணும், On Kanum - (எனது) கண்களும்
துயிலும், Thuyilum - உறக்கங்கொள்ளும்
என்நிறம், Enniram - எனது மேனி நிறமும்
கோண்டு வந்து, Kondhu Vandu - முகந்துகொண்டுவந்து
பண்டு பண்டு போல் ஓக்கும், Pandhu Pandhu Pol Okkum - முன்னைய வண்ணமாகும்
ஊதும் ஆகில், Oodhum Aakil - (என்னருகில்) ஊதுமானால்