திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1958 | பெரிய திருமொழி || (11-1–குன்றமொன்) - (பிரிவு ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வைத்த கண் மாறாதே கண்டு கொண்டே இருக்க வேண்டும்படியான ஆகர்ஷகமான வடிவை உடையவர் – ஒரு மேருவை இனிய மேகம் படிந்தால் போலே ஸ்ரீ பெரிய திருவடி திருத் தோளிலே வர – சிதிலை யாகாதே நின்று-நான் கண்டத்துக்கு தண்டமோ –காமன் ஆனவன் தன்னுடைய புஷ்ப பாணங்களாலே-தோல் புரையே அன்றியே மர்மத்திலே எய்கிற இது) 7 | பூவை வண்ணனார் புள்ளின் மேல் வர
மேவி நின்று நான் கண்ட தண்டமோ
வீவில் ஐங்ணை வில்லி யம்பு கோத்து
ஆவியே இலக்காக எய்வதே –11-1-7 | பதவுரை Show / Hideஐங்கணை வில்லி, Aingadai Villi - மன்மதனானவன் வீவு இல், Veivu Il - இறைப்பொழுதும் ஓய்வில்லாமல் அம்பு கோத்து, Ambu Koththu - பாணங்களைத் தொடுத்து ஆவியே இலக்கு ஆக எய்வது, Aaviye Ilakku Aaga Eyvathu - என் உயிரையே லஷயமாகக் கொண்டு பிரயோகிப்பதானது பூவை வண் ணனார், Poovai Vannanaar - காயம்பூவண்ணரான பெருமாள் புள்ளின் மேல் வர, Pullin Mel Vara - பெரிய திருவடியின் மீது எழுந்தருள நான்மேவி நின்று, Nanmevi Nindru - நான் விரும்பி நின்று கொண்டு கண்ட தண்டமோ, Kanda Thandamo - கண்டதற்கான தண்டனையோ |