திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1926 | பெரிய திருமொழி || (10-8–காதில் கடிப்பு) - (ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மயிர் முடி பேணாதே வர வேணுமோ –ஆயுதத்தோடு வர வேணுமோ – பின்னை வெற்றி கொண்டாடி நிற்க வேணுமோ) 5 | சுற்றும் குழல் தாழச் சுரிகை அணைத்து
மற்றும் பல மா மணி பொன் கொடணிந்து
முற்றம் புகுந்து முறுவல் செய்து நின்றீர்
எற்றுக்கு இது என் இது என் இது என்னோ –10-8-5 | பதவுரை Show / Hideகுழல், Kuzhal - திருக்குழல்களானவை (- (இதுஎன் இதுஎன் இதுஎன்?)) சுற்றும், Sutrum - பிடரியைச்சுற்றிலும் தாழ, Thaa - தாழ்ந்தலையப்பெற்றும் சுரிகை, Surigai - உடைவாளை அணைத்து, Anaiththu - தரித்துக்கொண்டும் மற்றும் பல, Mattrum Pala - மற்றும் பலவகைப்பட்ட மா மணி, Maa Mani - சிறந்த ரத்னாபரணங்களையும் பொன், Pon - பொன்னுபரணங்களையும் அணிந்துகொடு, Anindhukodu - சாத்திக்கொண்டும் முற்றம் புகுந்து, Muttram Pugundhu - (எங்கள்வீட்டு) முற்றத்திலே வந்து சேர்ந்து முறுவல் செய்து, Muruvai Seidhu - புன்சிரிப்புச் சிரித்து ஏற்றுக்கு நின்றீர், Aetrukku Nindheer - எதுக்காக நிற்கிறீர்? |