திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1922 | பெரிய திருமொழி || (10-8–காதில் கடிப்பு) - (ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (காலத்தைத் தப்பினான் ஆயிற்று -ஒப்பித்து வர வேண்டுகையாலே – இவர்களுக்கு உடலாக ஒப்பிக்கிறத்தோடு-இவர்களோடு சம்ஸ்லேஷிக்கிறதோடு வாசி என் என்றாயிற்று -அவன் படி – இருந்தபடியே உகக்கிற எங்களுக்கு ஒப்பிக்க வேணுமோ – கிட்டி வரச் செய்தேயும் காலத்தைத் தப்பி வருகையாலே ஓர் அடியிலே பத்தடி இட்டான் ஆயிற்று –சாபராதன் ஆகையாலே கிட்டி வர மாட்டுகிறிலன்- ஆற்றாமையாலே புறம்பு போக மாட்டுகிறிலன்–ஒப்பித்துக் கொடு வர வேணுமோ – காலத்தைத் தப்பி வர வேணுமோ – சாபராதனானால் மேல் விழ வன்றோ வடுப்பது) 1 | காதில் கடிப்பிட்டுக் கலிங்கம் உடுத்துத்
தாது நல்ல தண்ணம் துழாய் கொடு அணிந்து
போது மறுத்துப் புறமே வந்து நின்றீர்
ஏதுக்கு யிதுவென் யிதுவென் யிதுவென்னொ –10-8-1 | பதவுரை Show / Hideகாதில், Kaadhil - காதிலே (- (பெரியவரே) (இது ஏன்? இது ஏன்? இது ஏன்?)) கடிப்பு, Kadippu - குண்டலத்தை இட்டு, Ittu - அணிந்துகொண்டும் கலிங்கம் உடுத்து, Kalingam Uduthu - திருப்பரியட்டத்தைச் சாத்திக் கொண்டும் தாது நல்ல த ண் அம் துழாய், Thaadu Nalla Tha N Am Thuzhai - தாதுகளையுடைத்தாய நல்ல குளிர்ந்த அழகிய திருத்துழாய்மாலையை அணிந்து கொடு, Aninthu Kodu - அணிந்து கொண்டும் போது மறித்து வந்து, Podhu Marithu Vandu - காலதாமதமாக வந்து புறமே, Purame - கதவின் புறமாக எதுக்கு நின்றீர், Ethukku Nindreer - ஏன் நிற்கின்றீர் |