திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1913 | பெரிய திருமொழி || (10-7–மானமுடைத்து) - (கண்ணனது செய்தியைக் குறித்து யசோதை பணித்தலும் ஆய்ச்சியர் முறையிடுதலும்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தாமரை போலே இருக்கிற அதரமானது வெளுத்து இருக்க –இவள் நிறம் பெறுகைக்கு நான் எத்தைச் செய்வேன்) 6 | மண் மகள் கேள்வன் மலர்மங்கை நாயகன் நந்தன் பெற்ற மதலை
அண்ணல் இலைக் குழலூதி நஞ்சேரிக்கே அல்லிற்றான் வந்த பின்னை
கண் மலர் சோர்ந்து முலை வந்து விம்மிக் கமலச் செவ்வாய் வெளுப்ப
என் மகள் வண்ணம் இருக்கின்றவா நங்காய் என் செய்கேன் என் செய்கேனோ –10-7-6 | பதவுரை Show / Hideநங்காய், Nangai - யசோதைப்பிராட்டியே! (- (என் செய்கேன் என் செய்கேன்)) மணமகள் கேள்வன், Manamagal Kaelvan - பூமிப்பிராட்டிக்கு வல்லபனாய் மலர் மங்கை நாயகன், Malar Mangai Naayagan - பெரிய பிராட்டியார்க்கு நாயகனாய் நந்தன் பெற்ற மதலை, Nandhan Pettra Mathalai - நந்தகோபன் பெற்ற பிள்ளையாய் அண்ணல் தான், Annal Thaan - ஆண் பிள்ளைத்தனத்தில் குறையற்றவனான கண்ணபிரான் இலை குழல், Ilai Kuzhal - இலையினாலாகிற ஊது குழலை ஊதி, Oothi - ஊதிக்கொண்டு அல்லில், Allil - இரவில் நம் சேரிக்கே, Nam Cherikke - நம் மனைக்கு வந்த பின்னை, Vandha Pinnai - வந்த பிறகு, கண் மலர், Kan Malar - குவலைமலர் போன்றகண்கள் சோர்ந்து, Soarnthu - வதங்கியும் முலை வந்து விம்மி, Mulai Vandhu Vimmi - முலைகள் நெறித்துக் கிளர்ந்தும் கமலம் செம் வாய் வெளுப்ப, Kamalam Sem Vaai Veluppa - தாமரைபோற் சிவந்த அதரம் வெளுத்தும் போகவும் என் மகள் வண்ணம் இருக்கின்ற ஆ, En Magal Vannam Irukkindra Aa - என் மகளின் வடிவு விவர்ணப்பட்டிருக்கிற படியை என் சொல்வேன்!, |