திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1854 | பெரிய திருமொழி || (10-1–ஒரு நல் சுற்றம்) (பதினெண் திருப்பதிகள்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ கிருஷ்ணனாய் அனுகூல ஸ்பர்சம் உள்ள வெண்ணெயை விழுங்கினவனை ஸ்ரீ திருவழுந்தூரிலே கண்டோம் இனிப் போய் ஸ்ரீ திரு வெக்காவில் காணக் கடவோம்) 7 | கூந்தலார் மகிழ் கோவலனாய் வெண்ணெய்
மாந்து அழுந்தையில் கண்டு மகிழ்ந்து போய்
பாந்தள் பாழியில் பள்ளி விரும்பிய
வேந்தனைச் சென்று காண்டும் வெக்கா வுளே –10-1-7 | பதவுரை Show / Hideகூந்தலார் மகிழ் கோவலன் ஆய், Koondhalar Magizh Kovalain Aay - சிறந்த கூந்தலையுடையரான ஸ்த்ரீகள் உகக்கும்படியான கோபாலகிருஷ்ணனாய்த் திருவவதரித்து (- (கண்டு மகிழ்ந்து போய்)) வெண்ணெய், Vennai - வெண்ணெயை மாந்த, Mantha - அமுதுசெய்யாநிற்க அழுந்தையில், Azhundhaiyil - தேரழுந்தூரிலே பாந்தள் பாழியில், Panthal Pazhiyil - திருவனந்தாழ்வானாகிற படுக்கையிலே பள்ளி, Palli - திருக்கண்வளர்தலை விரும்பிய, Virumbiya - விரும்பிக் கைக்கொண்ட வேந்தனை, Vendhanai - ஸர்வேச்வரனை வெஃகாவுள், Vekavul - திருவெஃகாவில் சென்று காண்டும், Sendru Kaandum - போய் ஸேவிப்போம் |