திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1840 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1840பெரிய திருமொழி || (9-10–எங்கள்) (திருக் கோட்டியூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவ்வோ யுகங்கள் தோறும் ஆஸ்ரயிப்பார் உகந்த திரு நிறத்தை தானும் உகந்து கொண்டு பிரளய ஆபத்துக்களிலும் உதவும் ஸ்வ பாவனானவன் ஸ்ரீ திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனான் – என்கிறார்) 3
வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் விண்ணவர் தமக்கு இறை எமக்கு ஒள்ளியான் உயர்ந்தான் உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான் துள்ளு நீர் மொண்டு கொண்டு சாமரைக் கற்றை சந்தந முந்தி வந்தசை தெள்ளு நீர் புறவில் திருக் கோட்டியூரானே –9-10-3
பதவுரை Show / Hide
வெள்ளியான், Velliyaan - (கிருதயுகத்தில்) வெளுத்த நிறமுடையவனும் (- (இப்படியிருந்தும்))
கரியான், Kariyaan - (கலியுகத்தில்) கறுத்தநிற முடையவனும்
மணி நிறம் வண்ணன், Mani Niram Vannan - (த்வாபரயுகத்திலே) நீல மணியின்நிறம் போன்ற நிறமுடையவனும்
விண்ணவர் தமக்கு இறை, Vinnavar Thamakku Irai - நித்யஸூரிகளுக்கு நிர்வாஹகனும்
உயர்ந்தான், Uyarnthaan - எல்லாரினும் மேம்பட்டவனும்
எமக்கு ஒள்ளியான், Emakku Olliyaan - எனக்குத்தன்னழகைக் காட்டித்தந்தவனும்
உலகு ஏழும் உண்டு, Ulaku Ezhum Undu - (பிரளயகாலத்திலே) ஸப்தலோகங்களையும் திருவயிற்றிலே வைத்துக்காத்து
உமிழ்ந்தான், Umizhndhaan - பிறகு வெளிப்படுத்தினவனுமான ஸர்வேச்வரன்
துள்ளு நீர், Thullu Neer - கொந்தளிக்கின்ற அலைகளாலே
சாமரை கற்றை, Saamarai Kattrai - சாமரத்திரள்களையும்
சந்தனம், Sandanam - சந்தனமரங்களையும்
மொண்டு கொண்டு வந்து, Montu Kondu Vandu - இழுத்துக்கொண்டு வந்து
உந்தி, Undhi - தள்ளி
அசை, Asai - பிரவஹிக்கின்ற
தெள்ளுநீர், Thelluneer - தெளிந்தநீரையுடைய
புறவின், Puravin - சுற்றுப்பக்கங்களோடு கூடின
திருக்கோட்டியூரான, Thirukkoottiyooraan - திருக்கோட்டியூரிலுள்ளான்