திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1826 | பெரிய திருமொழி || (9-8–முந்துற) (திரு மாலிருஞ்சோலை 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (என் குல நாதனாய் அப்படி அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருக்கிறவர் நித்ய சூரிகளுக்கும் சம்சாரிகளுக்கும் ஒக்க முகம் கொடுக்கலாம் தேசம் என்று திரு உள்ளம் பற்றி வர்த்திக்கிற தேசம்) 9 | புந்தியில் சமணர் புத்தர் என்று இவர்கள் ஒத்தன பேசவும் உகந்திட்டு
எந்தை பெம்மனார் இமையவர் தலைவர் எண்ணி முன் இடம் கொண்ட கோயில்
சந்தனப் பொழிலின் தாழ் சினை நீழல் தாழ் வரை மகளிர்கள் நாளும்
மந்திரத்திறைஞ்சும் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –9-8-9 | பதவுரை Show / Hideபுந்தி இல், Pundhi Il - விவேகமற்ற (- (மட நெஞ்சே!-) (மாலிருஞ்சோலை, வணங்குதும் வா)) சமணர், Samanar - சமணரென்றும் புத்தர் என்ற இவர்கள், Buddhar Endra Ivargal - பௌத்தர் என்றும் சொல்லப்படுகிற வேதபாஹ்யர்கள் ஒத்தன, Oththana - தங்களுடைய துர்ப்புத்திக்கு ஒத்த பொருள்களை பேசவும், Pesavum - சொல்லச் செய்தேயும் உகந்திட்டு, Uganthittu - (இப்பாவிகள் தம்மைப் பணியாவிட்டாலும் அன்பர்க்கு உதவப் பெற்றோமே! என்று) திருவுள்ள முவந்து எந்தை பெம்மானார், Endhai Pemmanaar - என் தந்தைமுதலானார்க்கும் நாதராய் இமையவர் தலைவர், Imaiyavar Thalaivar - நித்யஸூரிகளுக்குத் தலைவரான பெருமாள் முன், Mun - முன்னே எண்ணி, Enni - இதுவேபாங்கான விட மென்றெண்ணி இடம் கொண்ட, Idam Konda - ஸ்வீகரித்தருளின கோயில் வரை மகளிர்கள், Varai Magalirgal - மலைப்பெண்கள் சந்தனம் பொழிலின், Sandhanam Pozhilin - சந்தனத் தோப்பிலுள்ள தாழ் சினை, Thazh Sinai - தாழ்ந்த கிளைகளினுடைய நீழல் தாழ், Neezhal Thazh - நிழலின்கீழே (இருந்துகொண்டு) நாளும், Naalum - நாள்தோறும் மந்திரத்து, Mandiraththu - மந்திரங்களைக் கொண்டு இறைஞ்சும், Iraichum - துதிக்கப்பெற்ற |