திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1825 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1825பெரிய திருமொழி || (9-8–முந்துற) (திரு மாலிருஞ்சோலை 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திருப் பாற் கடலிலே திரு வநந்த வாழ்வான் மேலே கண் வளர்ந்து அருளி –அங்கு நின்றும் போந்து – அவதரித்து பதத்தாலே -பதற்றத்தாலே -அடி மேல் அடியாக விட்டுக் கொடு வருகிற குதிரையினுடைய மிக்க சீற்றத்தைப் போக்கின -ஸ்ரமஹரமான வடிவை உடையவன் வர்த்திக்கிற ஸ்ரீ கோயில்) 8
புதமிகு விசும்பில் புணரி சென்று அணவ பொரு கடல ரவணைத் துயின்று பதமிகு பரியின் மிகுசினம் தவிர்த்த பனி முகில் வண்ணர் தம் கோயில் கதமிகு சினத்த கடதடக் களிற்றின் கவுள் வழிக் களி வண்டு பருக மத மிகு சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –9-8-8
பதவுரை Show / Hide
புணரி, Punari - (திருப்பாற்கடலின்) அலைகளானவை (- (மடநெஞ்சே!-) (அதைவிட்டுக் திருவாய்ப்பாடியிலே வந்து பிறந்தருளி) (மாலிருஞ்சோலை, வணங்குதும் வா))
புதம் மிகு விசும்பில் சென்று அணவபொரு, Pudham Miku Visumbil Sendru Anavaporu - மேகங்கள் நிறைந்த ஆகாசத்திலே சென்று உறாயும்படியாகக் கொந்தளிக்கிற
கடல், Kadal - திருப்பாற்கடலிலே
அரவு அணை, Aravu Anai - திருவனந்தாழ்வானாகிற படுக்கையின்மீது
துயின்று, Thuyinru - பள்ளிகொள்பவனாயிருந்து
பதம் மிகு பரியின், Patham Miku Pariyin - முயற்சிமிக்க (கேசியென்கிற) குதிரைவடிவான அசுரனுடைய
மிகு சினம், Miku Sinam - மிக்க சீற்றத்தை
தவிர்த்த, Thavirtta - போக்கினவரும்
பனி முகில் வண்ணர் தம், Pani Mukil Vannar Tham - குளிர்ந்த மேகம் போன்ற வடிவையுடையவருமான பெருமாளுடைய கோயில்
கதம் மிகு, Katham Miku - மிகக் கோபத்தையுடைத்தாய்
சினத்த, Sinath - (அதற்கு மூலமான) த்வேஷத்தையுடைத்தாய்
கடம், Kadham - மதங்கொண்ட
தட, Thada - பெரிய
களிற்றின், Kalittrin - யானையினுடைய
கவுள் வழி, Kavul Vazhi - கபோலத்தின் வழியே (பெருகாநின்ற)
களி, Kali - மதஜலத்தை
வண்டு, Vandu - வண்டுகள்
பருக, Paruga - பானம் பண்ணாநிற்கச் செய்தேயும்
மதம் மிகு சாரல், Matham Miku Saaral - மதநீர்பாய்ந்து வெள்ளமிடாநின்ற பக்கங்களை யுடைத்தான