திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1814 | பெரிய திருமொழி || (9-7–தந்தை தாய்) (திரு வல்லவாழ்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நீர்க் களிப்பை அறுக்கைக்கு ஈடாக உஷ்ண கிரணனான ஆதித்யனாய் அவனால் வந்த தாபத்தை ஆற்றுகைக்கு ஈடான தண்ணளியை உடைத்தான சந்த்ரனாய் – மேக சஞ்சாரத்தை யுடைத்தான ஆகாசமாய் நிற்கிற ஆச்சர்ய பூதரானவர் –கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம் படி வந்து நிற்கிற ஸ்ரீ திரு வல்ல வாழை) 7 | நோயெலாம் பெய்ததோர் ஆக்கையை மெய்யெனக் கொண்டு வாளா
பேயர் தாம் பேசுமப் பேச்சை நீ பிழை எனக் கருதினாயேல்
தீயுலா வெங்கதிர்த் திங்களாய் மங்குல் வானாகி நின்ற
மாயனார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே –9-7-7 | பதவுரை Show / Hideசோய் எலாம், Soy Elam - எல்லா நோய்களையும் (- (நெஞ்சே!) (வல்லவாழ் *** மருவு)) பெய்த்து, Peytthu - இட்டுப்பண்ணின ஓர் ஆக்கையை, Or Akkaiyai - சரீரத்தை மெய் என கொண்டு, Mei En Kondu - மெய்யென்றே எண்ணிக்கொண்டு பேயர்தாம், Peyartham - அவிவேகிகள் வாளா, Vaalai - வீணாக பேசும் அப்பேச்சை, Pesum Appechchai - பேசுகிற பேச்சுக்களை பிழை என நீ கருதினாய் எல், Pizhai En Ni Karuthinay El - பிசகென்று நீ நினைத்தாயாகில், தீ உலாம் வெம் கதிர், Thi Ulam Vem Kathir - ஜ்வாலையோடு கூடின உஷ்ண கிரணனான ஸூரியனாகவும் திங்கள் ஆய், Thingal Ay - சந்திரனாகவும் மங்குல் வான் ஆகி நின்ற, Mangul Vaan Aagi Nindra - மேக ஸஞ்சாரத்தையுடைய ஆகாசமாகவும் பரம்பி நிற்கின்ற மாயனார், Maayanar - ஆச்சர்யபூதனான பெருமானுடைய |