திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1813 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1813பெரிய திருமொழி || (9-7–தந்தை தாய்) (திரு வல்லவாழ்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ப்ராஹ்மண லஷணங்களால் குறைவற்று இருக்கிற-நாலு வகைப் பட்ட வேதம்-பஞ்சாக்னிகள் பஞ்ச மகா யஞ்ஞங்கள் அங்கங்கள் ஆறு இவற்றை யாத்ரையாக உடையராய் இருப்பார் வர்த்திக்கிற ஸ்ரீ திரு வல்ல வாழை) 6
உருவினார் பிறவி சேரூன் பொதி நரம்பு தோல் குரம்பையுள் புக்கு அருவி நோய்செய்து நின்ற ஐவர் தாம் வாழவதற்கு அஞ்சினாயேல் திருவினார் வேத நான்கு ஐந்து தீ வேள்வியோடு அங்கமாறும் மருவினார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே –9-7-6
பதவுரை Show / Hide
உருவின் ஆர் பிறவி சேர், Uruvin Aar Piravi Ser - ஸூக்ஷமசரீரத்தோடே கூடியிருப்பதுபிறப்பையடைந்து
ஊன் பொதி, Oon Pothi - மாமஸத்தைப் பொதிந்து கொண்டு கிடக்கிற
நரம்பு தோல் குரம்பையுள், Narambu Thol Kurampaiyul - நரம்பும் தோலுமாகி குடிசையினுள்ளே
ஐவர்தாம், Aivardham - பஞ்சேந்திரியங்களானவை,
புக்கு, Pukku - புகுந்து
அருவி நோய், Aruvi Noi - ஹிம்ஸைகளைப்பண்ணி நோவுபடுத்ததிக்கொண்டு
வாழ்வதற்கு, Vazhvadarku - குடியிருப்பதற்கு
அஞ்சினால் எல், Anjinal El - நீ பயப்பட்டாயாகில்
திருவின் ஆர், Thiruvin Ar - பரமப்ரமாணமா யிருக்கையாகிற ஸ்ரீயோடுகூடின
வேதம் நான்கு, Vedham Nanku - நான்கு வேதங்களையும்
அங்கம் ஆறும், Angam Arum - ஆறு வேதாங்கங்களையும்
ஐந்து தீ, Ainthu Thi - பஞ்சாக்நிகளையும்
ஐந்து வேள்வி, Ainthu Velvi - பஞ்சமஹாயஜ்ஞங்களையும்
மருவினார், Maruvinar - பொருந்தியிருப்பவர்கள் வாழ்கிற