திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1804 | பெரிய திருமொழி || (9-6–அக்கும் புலியின்) (திருக்குறுங்குடி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஜன்மாதிகளுக்கு ஹேதுவாய் இருக்கிற விஷயங்களைப் பற்றி இருக்கிற மநோ ரதத்தைத் தவிர்த்து அவனுக்கே அடியோம் என்று இருக்கிற நீங்கள் அவன் வர்த்திக்கிற ஊரைச் சென்று அடையுங்கோள்) 7 | வல்லிச் சிறு நுண்ணிடை யாரிடை நீர் வைக்கின்ற
அல்லல் சிந்தை தவிர அடைமின் அடியீர்காள்
சொல்லில் திருவே யனையார் கனிவாய் எயிறு ஒப்பான்
கொல்லை முல்லை மெல்லரும்பீனும் குறுங்குடியே –9-6-7 | பதவுரை Show / Hideஅடியீர்காள், Adiyeergal - பகவத் பக்தர்களே! நீர், Neer - நீங்கள் வல்லி சிறு நுண் இடையாரிடை, Valli Siru Nun Idaiyaridai - கொடிபோன்று மிக நுண்ணிய இடையை யுடையரான பெண்களிடத்து வைக்கின்ற, Vaikkindra - வைத்திருக்கிற அல்லல் சிந்தை தவிர, Allal Sindhai Thavira - துக்ககரமான சிந்தனையைத் தவிர்த்து கொல்லை முல்லை, Kollai Mullai - கொல்லைகளிலுள்ள முல்லைகளானவை சொல்லில் திரு அனையார், Sollil Thiru Anaiyaar - சொல்லுமிடத்து ஸ்ரீ மஹா லக்ஷ்மியை யொத்திருக்கின்ற ஸ்த்ரீகளினுடைய கனிவாய், Kanivai - கோவைக்கனிபோன்ற வாயிலுள்ள எயிறு ஒப்பான், Eiyiru Oppaan - பற்களோடொப்ப மெல் அரும்பு, Mel Arumbu - அழகிய அரும்புகளை ஈனும், Eenum - புறப்படவிடுமிடமான குறுங்குடி, Kurungkudi - திருக்குறுங்குடியை அடைமின், Adaimin - அடையுங்கோள் |