திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1778 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1778பெரிய திருமொழி || (9-4–காவார்) (திரு புல்லாணி 2) - (பிரிவு ஆற்றாத தலைவி பறவைகளைத் தூது விட்டும் பிறை தென்றல் முதலியவற்றால் வருந்தியும் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிரிந்த நிலத்தில் இருக்க ஒண்ணாது ஒழிவது போகத் தொடங்கின தேசத்திலே போய்ப் புக ஒண்ணாது ஒழிவது நம் தசை இருந்த படி -என் -என்கிறாள்) 1
காவார் மடல் பெண்ணை அன்றில் அரி குரலும் ஏவாயின் ஊடு இயங்கும் எக்கில் கொடிதாலோ பூவார் மணம் கமழும் புல்லாணி கை தொழுதேன் பாவாய் இது நமக்கோர் பான்மையே யாகாதே –9-4-1
பதவுரை Show / Hide
கா ஆர்மடல், Kaa Aarmadal - சோலையெங்கும் நிறைந்த மடலையுடைய
பெண்ணை, Pennai - பனைமரத்திலுள்ள
அன்றில், Anril - அன்றிற்பறவையினுடைய
அரி குரலும், Ari Kuralum - தழுதழுத்த த்வநியும்
எவாயினுடு இயங்கும் எஃகின், Evayinudu Iyankum Eghin - அம்புபட்ட புண்வாயில் வ்யா பரிக்கின்ற வேற்படையிற் காட்டிலும்
கொடிது, Kodithu - கொடியதாயிருக்கின்றது;
ஆல் ஓ, Aal O - ஐயோ!;