திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1764 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1764பெரிய திருமொழி || (9-2–பொன்னிவர் மேனி) (திரு நாகை) - (தலைவனின் உருவெளிப்பாட்டில் நலியும் தலைவி தோழியிடம் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வடிவைப் பார்த்த வாறே மேக் சகலங்கள் அன்றிக்கே எல்லாம் ஒன்றாகத் திரண்டு வர்ஷிக்கையிலே ஒருப்பட்ட மேகம் போலே இரா நின்றது –விசஜாதீயத்துக்கு சஜாதியங்களில் சில வற்றை சொன்ன இடம் என் சொன்னோம் ஆனோம்) 7
பிணியவிழ் தாமரை மொட்டலர்த்தும் பேரருளாளர் கொல் யான் அறியேன் பணியும் என்னெஞ்சம் இது என் கொல் தோழி பண்டிவர் தம்மையும் கண்டறியோம் அணி கெழு தாமரை யன்ன கண்ணும் அங்கையும் பங்கயம் மேனி வானத்து அணி கெழு மா முகிலே யும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகிய வா –9-2-7
பதவுரை Show / Hide
பிணி அவிழ் தாமரை மொட்டு அலர்த்தும், Pini Avizh Thaamarai Mottu Alarthum - பாவந்தொலையப் பெற்ற (மஹான்களினுடைய ஹ்ருதய புண்டரீக மென்கிற தாமரை மொக்கை விகஸிப்பிக்கவல்ல (- (அச்சோ ஒருவர் அழகிய ஆ-.))
பேரருளாளர் கொல், Perarulalar Kol - பேரருளாளப் பெருமானோ இவர்!,
யான் அறியேன், Yaan Ariyeen - நான் அறிகின்றிலேன்;
தோழீ, Thozhi - வாராய் தோழியே!,
என் நெஞ்சம், En Nenjam - என்னுடைய நெஞ்சானது
பணியும், Paniyum - தானே வணங்கா நின்றது;
இது என்கொல், Idhu Enkol - இது என்னோ? ;
இவர் தம்மை, Ivar Thammai - இவரை
பண்டும் கண்டு அறியோம், Pandum Kandu Ariyom - முன்னமொருகாலும் பார்த்தில்லை
கண்ணும், Kannum - இவருடைய (திருக்கண்கள்)
அணி கெழு, Ani Kezhu - அழகுமிக்க
தாமரை அன்ன, Thaamarai Anna - தாமரை போலிருக்கின்றன;
அங்கையும், Angaiyum - அங்கைகளும்
பங்கயம், Pangayam - தாமரையே
மேனி, Meeni - திருமேனி விஷயத்தில்
வானத்து அணி கெழுமா முகிலேயும் ஒப்பர், Vaanathu Ani Kezhumaa Mukileyum Oppar - ஆகாசத்திலே அழகு மிக்கெழுந்த காளமேகத்தை ஒத்திருக்கின்றார்;