திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1736 | பெரிய திருமொழி || (8-9–கைம்மான) (திரு கண்ணபுரம் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒரு தேச விசேஷத்திலே போனால் சதா தர்சன நத்தாலே -அஹம் அன்னம் அஹம் அன்னம் -என்று களிக்குமத்தை இங்கே கண்ணாலே கண்டு களிக்கப் பெறுவது என்றோ -என்கிறார் – இங்கே கண்களாலே காண்கை யாவது என் என்னில்-இவருடைய த்வரை இருக்கிற படி இறே) 9 | கண்ணார் கண்ண புரம் கடிகைகடி கமழும்
தண்ணார் தாமரை சூழ் தலைச் சங்க மேல் திசையுள்
விண்ணோர் நாண் மதியை விரிகின்ற வெஞ்சுடரை
கண்ணாரக் கண்டு கொண்டு களிக்கின்றது இங்கு என்று கொலோ –8-9-9 | பதவுரை Show / Hideகண் ஆர், Kan Aar - கண் பொருந்தும்படியான (ஸுந்தரமான) கண்ணபுரம், Kannapuram - திருக்கண்ணபுரத்திலும் கடிகை, Kadikai - திருக்கடிகாசலத்திலும் தண் ஆர், Than Aar - குளிர்ச்சி பொருந்திய தாமரை சூழ், Thamarai Soozh - தாமரைகளாலே சூழப்பட்ட தலைச்சங்கம் மேல் திசையுள், Thalaichangam Mel Thisaiyul - தலைச்சங்கமென்னும் பதியில் மேலைப்பக்கத்திலும் விண்ணோர், Vinnor - நித்யஸூரிகளுக்கு நாள் மதியை, Naal Madiyai - நாள்தோறும் சந்திரன்போலே அநுபவிக்கவுரியனாய் விரிகின்ற வெம் சுடரை, Virikindra Vem Sudarai - உதயகாலத்தில் விரியும் ஸூரியன்போலே ப்ரதாபம் மிக்கவனான எம்பெருமானை இங்கு, Ingu - இந்நிலத்திலே கண் ஆர கண்டுகொண்டு, Kan Aara Kandukondu - கண்கள் த்ருப்திபெறுமளவும் காணப்பெற்று களிக்கின்றது, Kalikkindrathu - ஆநந்திப்பது என்று கொல், Endru Kol - என்றைக்கோ?. |