திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1720 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1720பெரிய திருமொழி || (8-8–வானோர் அளவும்) (திரு கண்ணபுரம் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அண்டபித்தியிலே சென்று சேர்ந்த பூமியை இடந்து எடுத்துக் கொண்டு ஏறுகைக்கு ஈடான வலியை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனை) 3
பாராரளவும் முது முந்நீர் பரந்த காலம் வளை மருப்பில் ஏரார் உருவத் தேனமாய் எடுத்த வாற்றல் அம்மானை கூரார் ஆரல் இரை கருதிக் குருகு பாயக் கயல் இரியும் காரார் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-3
பதவுரை Show / Hide
முது முந்நீர், Muthu Munneer - கடல் வெள்ளம் (- (அடியேன் கண்டுகொண்டேன்-.))
பாராரளவும், Paararalavum - பூமிப்பரப்படங்கலும்
பரந்த காலம், Paranda Kaalam - சூழ்ந்த காலத்தில்
வளை மருப்பில், Valai Maruppil - வளைந்த கோரப்பல்லையுடைய
ஏர் ஆர் உருவத்து, Aer Ar Uruvathu - அழகு மிக்க திருமேனியை யுடைய
ஏனம் ஆய், Enam Aayi - வராஹமூர்த்தியாகி
எடுத்த, Edutha - (பூமியை) உத்தரிப்பித்த
ஆற்றல், Aatral - மிடுக்கையுடையனான
அம்மானை, Ammaanai - ஸர்வேச்வரனை
கூர் ஆர், Koora Ar - கூர்மை பொருந்திய (வாயலகுகளையுடைய)
குருகு, Kurugu - நாரைகளானவை
ஆரல், Aaral - ஆரல் மீன்களை
இரை கருதி, Irai Karuthi - ஆஹாரமாகக் கொள்ள நினைத்து
பாய, Paaya - (நீரில்) பாய்ந்தவளவிலே
கயல், Kayal - கயல் மீன்கள்
இரியும், Iridum - அஞ்சியோடும் படியுள்ளதும்
கார் ஆர் புறவில், Kaar Ar Puravil - மேகங்கள் படிந்த சோலைகளை யுடையதுமான
கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்தில்