திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1715 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1715பெரிய திருமொழி || (8-7–வியமுடை) (திரு கண்ணபுரம் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பூமிப் பரப்பை அளந்து கொண்ட திருவடிகள்-சங்கைஸ் ஸூ ராணாம் -என்கிறபடியே அவற்றை எல்லாரும் ஒக்க இருந்ததே குடியாக ஆஸ்ரயிக்க- ஸ்ரீ பெரிய பிராட்டியார் விரும்பி அணையா நின்றுள்ள பெரிய வரை போன்று இருந்த மார்வை உடையவர்) 8
படி புல்கு மடி யிணைப் பலர் தொழ மலர் வைகு கொடி புல்கு தட வரை யகலமது டையவர் முடி புல்கு நெடு வயல் படை செல வடி மலர் கடி புல்கு கண புர மடிகள் தமிடமே –8-7-8
பதவுரை Show / Hide
முடி புல்கு, Mudi Pulgu - நாற்று முடிகளோடு கூடியிருக்கிற
நெடு வயல், Nedu Vayal - விசாலமான கழனிகளிலே
படை, Padai - கலப்பைகளை
செல, Sela - செலுத்தும்போது
அடி, Adi - கால்பட்ட
மலர், Malar - (தாமரை முதலிய) பூக்களானவை
கடி புல்கு, Kadi Pulgu - பரிமளத்தைப் புறப்பட விடப்பெற்ற
கணபுரம், Kanapuram - திருக்கண்ணபுரம்;-
பலர் தொழ, Palvar Thozha - பல பக்தர்கள் வணங்கும்படியாக
படி புல்கும் அடி இணை உடையவர், Padi Pulgum Adi Inai Udaiyavar - பூமியை யளாவிய திருவடியிணையை யுடையவரும்
மலர் வைகு, Malar Vaiku - தாமரைமலரில் பொருந்திய
கொடி, Kodi - கொடிபோன்ற பெரிய பிராட்டியார்
புல்கு, Pulku - அணையப்பெற்ற
தடவரை அகலம் அது உடையவர், Tadavarai Akalam Adhu Udaiyavar - பெரிய மலைபோன்ற திருமார்பை யுடையவருமான
அடிகள் தம், Adigal Tham - ஸ்வாமியினுடைய
இடம், Idam - திவ்யதேசமாம்