திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1674 | பெரிய திருமொழி || (8-3–கரையெடுத்த) (திரு கண்ணபுரம் 3) - (தலைமகளைப் பிரிந்த தலைமகள் இரங்கிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிரளய காலத்தில் எடுத்து வைத்து பின்னே வெளி நாடு காண உமிழ்ந்த ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு அவனுடைய ஆபத் சகச்வத்தை விஸ்வசித்து கிடாய் நான் கெட்டேன் -என்கிறார்) 7 | வண்டமரும் மலர்ப்புன்னை வரி நீழல் அணி முத்தம்
தெண்திரைகள் வரத் திரட்டும் திருக் கண்ண புரத் துறையும்
எண் திசையும் எழு சுடரும் இரு நிலனும் பெரு விசும்பும்
உண்டு உமிழ்ந்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே –8-3-7 | பதவுரை Show / Hideவண்டு அமரும், Vandu Amarum - வண்டுகள் படிந்திருக்கிற (- (திருக்கண்ணபுரத்து, உறையும் -;) (என் ஒளி வளை இழந்தேன்-.)) மலர், Malar - புஷ்பங்களையுடைத்தான புன்னை, Punnai - புன்னைமரத்தினுடைய வரி நீழல், Vari Neezhal - அகன்ற நிழலிலே தெண் திரைகள், Then Thiraigal - தெளிந்த அலைகளானவை அணி முத்தம், Ani Muththam - அழகிய முத்துக்களை வர திரட்டும், Vara Thirattum - கொண்டுவந்து திரட்டப்பெற்ற எண் திசையும், En Thisaiyum - எட்டுத் திசைகளையும் எழு கடலும், Ezu Kadalum - ஏழு கடல்களையும் இரு நிலனும், Iru Nilanum - விசாலமான பூமியையும் பெரு விசும்பும், Peru Visumbum - பெரிதான ஆகாசத்தையும் உண்டு, Undu - (பிரளயத்தில்) அமுது செய்து உமிழ்ந்த, Umizhndha - (பிறகு) வெளிப்படுத்தின பெருமானுக்கு, Perumanukku - ஸ்வாமிக்கு |