திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1665 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1665பெரிய திருமொழி || (8-2–தெள்ளியீர்) (திரு கண்ணபுரம் 2) - (தலைவியின் நிலை கண்ட தாய் தலைமகளை இயற்பழித்தும் தலைமகளது இளமைக்கு இறங்கியும் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (முதல் பாட்டிலே -தெள்ளியீர் தொழுத இவள் கை வளை கொள்வது தக்கதே -என்று தொழுத இவள் கையில் வளையை வாங்குகை தகுதி அல்ல தப்பச் செய்தோம் -என்று இசைந்து நின்றார் ஸ்ரீ சௌரிப் பெருமாள் – பின்பு தன்னிலே-இவர்க்கு இவள் கடவது என் கண் துயில் இன்றி இவர் கொள்ள -என்றும் – அரங்கமே இவள் தனக்கு ஆசையே -என்றும் சொன்னதை ஸ்ரீ சௌரிப் பெருமாள் கேட்டார் – சர்வதஸ் ஸ்ருதி மல்லோகே -என்று இருக்குமவர் இறே அவர் இப்படி இவள் சொன்னவாறே-வளை கொடுப்பதாக நினைத்து இருந்தோம் – இனி கொண்டு அது கொடுக்கிறது என் – இன்னம் எட்டுமது உண்டாகில் வாங்க அமையாதோ -என்று ஸ்ரீ சௌரிப் பெருமாள் சிவட்கு என்று-உன் மகளுக்கு ஸ்ரீ அரங்கமே எனபது ஆசை என்றாய் – அவளோடு நம்மோடு பிராப்தி இல்லை என்றும் சொன்னாய் – ஆனால் நம்மூருக்கு இவள் வருவான் என்-நாம் இவளை அழைத்தோமோ ஆசைப் பட்ட இடத்தேறப் போகல் ஆகாதோ -என்ன அதில் சம்சயம் இல்லை -ஸ்ரீ அரங்கமே இவள் தனக்கு ஆசை -நினைவும் அதுவே ஸ்வ அபிமத சித்திக்கு உறுப்பாக நாட்டார் செய்கிறதைக் கண்டு தனக்கும் தன் அபிமதம் சித்திக்குமோ -என்று தன் ஆசையாலே செய்வான் முறைமை கண்டு போனாள் இத்தனை -என்கிறாள் – கார்க்கடல் வண்ணர் மேல் எண்ணம் என்று என்றே இவளுக்கு மநோ ரதம் இலங்கொலி நீர் பெரும் பௌவம் மண்டி யுண்ண பெரு வயிற்ற கரு முகிலே ஒப்பர் வண்ணம் -என்று கடலைப் பருகின காள மேகம் போலே இறே ஸ்ரீ பெரிய பெருமாள் வடிவு இருப்பது – ஆகையாலே நினைவும் அங்கே என்னும் இடம் சித்தம் இறே) 8
தொண்டெல்லாம் நின்னடியே தொழுது உய்யுமா கண்டு தான் கண்ண புரம் தொழப் போயினாள் வண்டுலாம் கோதை என் பேதை மணி நிறம் கொண்டு தான் கோயின்மை செய்வது தக்கதே –8-2-8
பதவுரை Show / Hide
தொண்டு எல்லாம், Thondu Ellam - ஸகல பக்தவர்க்கங்களும்
நின் அடியே, Nin Adiye - உனது திருவடிகளையே
தொழுது, Thozhuthu - ஸேவித்து
உய்யும் ஆ கண்டு, Uyum Aa Kandu - உஜ்ஜீவித்துப் போவதைப் பார்த்து
தான், Thaan - இவளும்
கணபுரம், Kanapuram - திருக்கண்ணபுரத்தை
தொழ, Thozha - ஸேவிப்பதற்கு
போயினான், Poyinraan - சென்றான்;
வண்டு உலாம் கோதை, Vandu Ulaam Kothai - வண்டுகள் உலாவப்பெற்ற மயிர் முடியையுடையளான
என் பேதை, En Paithai - என் குழந்தையினுடைய
மணி நிறம் கொண்டு, Mani Niram Kondu - அழகிய மேனி நிறத்தைக் கொள்ளைகொண்டு
தான், Thaan - ஸ்வாமியாகிய நீ
கோயின்மை செய்வது, Koyinmai Seivathu - அநியாயம் பண்ணுவது
தக்கதே, Thakkadhe - தகுதியோ?