திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1613 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1613பெரிய திருமொழி || (7-7–திருவுக்கும்) (திருவழுந்தூர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (காலம் நீ இட்ட வழக்கு அன்றோ –உன் திருவடிகளை ஒழிய வேறு ஒன்றை அறியேன் அந்த ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் பிற்பட்டாருக்கும் இழவாமைக்கு அன்றோ நீ இங்கே வந்து நிற்கிறது) 6
தோயாவின் தயிர் நெய் அமுதுண்ணச் சொன்னார் சொல்லி நகும் பரிசே பெற்ற தாயால் ஆப்புண்டு இருந்து அழுது எங்கும் தாடாளா தரையோர்க்கும் விண்ணோர்க்கும் சேயாய் கிரேத திரேத துவாபர கலியுகமிவை நான்கும் ஆனாய் ஆயா நின்னடியன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே –7-7-6
பதவுரை Show / Hide
சொன்னார், Sonnar - எதையும் வாய்வந்தபடி சொல்லுகிறவர்கள் (- (அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே!- ;) (நின் அடி அன்றி மற்று அறியேன்-.-))
சொல்லி, Solli - வசைகூறி
நகும் பரிசே, Nakum Parisey - சிரிக்கும்படியாக
தோயா இன் தயிர் நெய் அமுது உண்ண, Thoya In Thayir Ney Amuthu Unna - நன்றாகத்தோயாதே இனிய தயிரையும் நெய்யையும் அமுது செய்ய (அப்பொழுது)
பெற்ற தாயால், Petra Thaayal - தாயாகிய யசோதையினால்
ஆப்புண்டு, Aappundu - கட்டுண்டு
இருந்து, Irundhu - போகமாட்டேதே நின்று
அழுது ஏங்கும், Azhuthu Aengum - விக்கி விக்கியழுத
தாடாளா, Thaadaala - பெரியோனே!
தரை யோர்க்கும், Tharai Yorkkum - பூமியிலுள்ளவர்களுக்கும்
விண்ணோர்க்கும், Vinnorkkum - விண்ணுலகத்திலுள்ளவர்களுக்கும்
சேயாய், Seyyaai - கிட்டக்கூடாதவனே!
முன், Mun - முன்னமே
கிரேத திரேத துவாபர கலியுகம் இவை நான்கும் ஆனாய், Kireetha Thireetha Dhuvabara Kaliyugam Ivai Naankum Aanai - கிருதயுகத் த்ரேதாயுகம் த்வாபரயுகம் கலியுகம் என்னுமிந்த நான்கு யுகங்களுக்கும் நிர்வாஹகனானவனே!
ஆயா, Aayaa - கோபாலக்ருஷ்ணனே!