திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1605 | பெரிய திருமொழி || (7-6–சிங்கமதாய்) (திருவழுந்தூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (முது நான்மறை உண்டு -பாசி பூத்த வேதம் –அது திரு வீதிகள் தோறும் திரைக் கிளப்பத்தை உடைய கடல் போலே கோஷியா நின்றுள்ள ஸ்ரீ தென் அழுந்தையில் மன்னி நின்ற – சகல கலைகளாலும் புருஷார்த்தமாக பிரதிபாதிக்கப் பட்டவனைக் கண்டு கொண்டு என் சர்வ அபேஷிதங்களையும் பெற்று ஹ்ருஷ்டன் ஆனேன்) 8 | நிலையாளாக வென்னை உகந்தானை நிலமகள் தன்
முலையாள் வித்தகனை முது நான்மறை வீதி தோறும்
அலையாரும் கடல் போல் முழங்கும் தென் அழுந்தையில் மன்னி நின்ற
கலையார் சொற்பொருளைக் கண்டு கொண்டு களித்தேனே –7-6-8 | பதவுரை Show / Hideஎன்னை, Ennai - என்னை (- (தென் அழுந்தையில் மன்னி நின்ற -;) (கண்டுகொண்டு களித்தேன்-.)) நிலை ஆள் ஆக, Nilai Aal Aaga - நிலைநின்ற அடியவனாக உகந்தானை, Uganthaanai - உகந்து திருவுள்ளம் பற்றினவனும் நிலம் மகள் தன், Nilam Magal Than - பூமிப்பிராட்டியினுடைய முலை, Mulai - திருமுலைத்தடங்களை ஆள், Aal - ஆளவல்ல வித்தகனை, Viththakanai - ஸமர்த்தனும் வீதி தொறும், Veethi Thorum - தெருக்கள் தோறும் முது நால் மறை, Muthu Naal Marai - புராதனமான நால் வேதங்களும் அலை ஆரும் கடல் போல் முழங்கும், Alai Aarum Kadal Pol Muzhangu - அலைகள் நிரம்பிய கடல் போலப் பெருமுழக்கம் செய்யப்பெற்ற கலை ஆர் சொல் பொருளை, Kalai Aar Sol Porulai - சாஸ்த்ரங்களில் நிறைந்துள்ள சொற்களுக்குப் பொருளாயிருப்பவனுமான பெருமானை |