திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1584 | பெரிய திருமொழி || (7-4–கண் சோர) (திருச்சேறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரமஹரமான திருச் சேறையிலே நிற்கிற ஸ்ரீ நாயனார் உடைய ஸ்லாக்கியமான வடிவு அழகைஅனுசந்தித்தேற்கு – ஸ்ரோத்ராதிகள் ஐந்தாலும் உண்டான வெளிச் சிறப்பை தன் பக்கலிலே ஆக்கிக் கொண்டான் – அது தனக்குத் தான் விஷயம் ஆனான் -என்றபடி – ஐ அறிவும் கொண்டானுக்கு ஆளான அளவிலே நிற்கிறது இல்லை – அவனுக்கு ஆளானார் அளவிலே ஆளாகா நின்றது என் அன்பானது) 7 | பை விரியும் வரி யரவில் படு கடலுள் துயில் அமர்ந்த பண்பா என்றும்
மை விரியும் மணி வரை போல் மாயவனே என்று என்றும் வண்டார் நீலம்
செய் விரியும் தண் சேறை எம்பெருமான் திருவடியைச் சிந்தித்தேற்கு என்
ஐ யறிவும் கொண்டானுக்கு ஆளானார்க்கு ஆளாம் என் அன்பு தானே –7-4-7 | பதவுரை Show / Hideபடுகடலில், Padukadalil - ஆழ்ந்த திருப்பாற்கடலில் பை விரியும் வரி அரவில், Pai Viriyum Vari Aravil - விரிந்த படங்களையும் புள்ளிகளையுமுடைய திருவனந்தாழ்வான் மீது துயில் அமர்ந்த, Thuyil Amarntha - பள்ளிகொண்ட பண்பா என்றும், Panpaa Endrum - குணசாலியே! என்றும், மை விரியும் மணி வரை போல், Mai Viriyum Mani Varai Pol - கருநிறம்மிக்க நீலமணி மயமான மலைபோன்ற (திருமேனியையுடைய) மாயவனே என்று என்றும், Maayavane Endru Endrum - ஆச்சரியனே! என்று பலகால் சொல்லி, வண்டு ஆர் நீலம், Vandu Aar Neelam - வண்டுகள் படிந்த கரு நெய்தல்களானவை செய், Sei - கழனிகளிலே விரியும், Viriyum - மலரப்பெற்ற தண் சேறை, Than Serai - குளிர்ந்த திருச்சேறையிலுள்ள எம்பெருமான், Emperumaan - எம்பெருமானுடைய திரு அடியை, Thiru Adiyai - திருவடிகளை சிந்தித்தேற்கு என், Sindhitheerkku En - தியானம் பண்ணாநின்ற என்னுடைய ஐ அறிவும் கொண்டானுக்கு, Ai Arivum Kondaanaikku - ஐம்புலன்களினறிவையும் தன் விஷயத்திலாக்கிக் கொண்ட அப் பெருமானுக்கு ஆள் ஆனார்க்கு, Aal Aanarkku - ஆட்பட்ட பாகவதர்களுக்கு என் அன்பு தான், En Anbu Thaan - என்னுடைய ப்ரீதியானது ஆள் ஆம், Aal Aam - உரியதாகும். |