திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1553 | பெரிய திருமொழி || (7-1–கறவா மடநாகு) (திரு நறையூர் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தேவர்கள் பருகும் அமிர்தம் போல் அன்றிக்கே கைங்கர்ய ருசி உடையராய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் பருகும் அம்ருதமாய் – அப்போதே எடுத்து நுகரலாம் படி கனி போலே இருக்கிறவனே – காணப் பெறாமையாலே அசந்நேவ-என்கிறபடியே உரு மாய்ந்த நான் கண்டு உஜ்ஜீவிக்கப் பெற்றேன்) 6 | பனியேய் பரங்குன்றின் பவளத் திரளே
முனியே திரு மூழிக் களத்து விளக்கே
இனியாய தொண்டரோம் பருகு இன்னமுதாய
கனியே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே –7-1-6 | பதவுரை Show / Hideபனி ஏய், Pani Aey - பனிமிக்கிருந்துள்ள பரம் குன்றின், Param Kunrin - சிறந்த ஹிமவத்பர்வதத்திலுள்ள திருப்பிரிதியி லெழுந்தருளியிருக்கிற பவளம் திரளே, Pavalam Thirale - பவளங்கள் திரண்டாற்போன்று அழகியவனே! முனியே, Muniye - (அடியாருடைய நன்மைகளைச்) சிந்திக்குமவனே! திருமூழிக் களத்து, Thirumoazhik Kalathu - திருமூழிக்களமென்னுந் திருப்பதியில் விளக்கே, Vilakke - விளக்குப்போல் விளங்குமவனே இனியாய், Iniyaai - பரமபோக்யனே! தொண்டரோம் பருகு, Thondarom Parugu - தொண்டரான அடியோங்கள் பானம பண்ணுதற்கு உரிய இன் அமுது ஆய, In Amuthu Aaya - இனிய அமுதமானவனே! கனியே, Kaniye - கனிபோன்றவனே! உன்னை கண்டு கொண்டு, Unnai Kandu Kondo - உன்னை ஸேவித்து உய்ந்தொழிந்தேன், Uyndhozhindhen - உஜ்ஜீவிக்கப் பெற்றேன் |