திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1540 | பெரிய திருமொழி || (6-10–கிடந்த நம்பி) (திரு நறையூர் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (யசோதை பிராட்டி உண்ட தயிரையும் வெண்ணெயும் களவு கண்டு அமுது செய்யப் புக்கால் அவள் கண்டு பிடித்து கட்டுவது அடிப்பதாக நிற்கும் இறே- அப்போது வெண்ணெயைக் களவு கண்டோம் என்றால் வருவதோர் எளிவரவு உண்டோ -என்று இருக்கும் ஆய்த்து) 3 | பூணாது அனலும் தறு கண் வேழம் மறுக வளை மறுப்பைப்
பேணான் வாங்கி யமுதம் கொண்ட பெருமான் திரு மார்வன்
பாணா வண்டு முரலும் கூந்தல் ஆய்ச்சி தயிர் வெண்ணெய்
நாணாது உண்டான் நாமம் சொல்லில் நமோ நாராயணமே –6-10-3 | பதவுரை Show / Hideபூணாது அனலும், Poonaadhu Anhalum - கட்டுத்தறிக்குப் பிடிபடாமல் சீறிக்கொண்டிருப்பதும் (- (நாமம் சொல்லில் நமோநாராயணமே-.)) தறுகண், Tharugann - வட்டமான கண்களையுடையதுமான வேழம், Vezham - (குவலயாபீடமென்னும்) யானையானது மறுக, Maruga - குடல்குழம்பும்படி பேணான், Penaan - அதை மதியாதவனாய் வளை மருப்பை, Valai Maruppai - (அதன்) வளைந்தகொம்புகளை வாங்கி, Vaangi - பறித்தெறிந்தவனும் அமுதம் கொண்ட பெருமான், Amudham Konda Perumaan - (கடலில் நின்றும்) அமுதத்தைக் கடைந்தெடுத்த பெருமை பொருந்தியவனும் திரு மார்வன், Thiru Marvan - பிராட்டியை மார்பிலுடைவனும் வண்டு பாண் ஆ முரலும் கூந்தல் ஆய்ச்சி, Vandu Paan Aa Murulum Koondhal Aaychi - வண்டுகளானவை இசையிலே பொருந்தும்படி ஒலிசெய்யப்பெற்ற மயிர்முடியையுடையளான இடைச்சியாகிய யசோதையினது தயிர் வெண்ணெய், Thayir Vennai - தயிர் வெண்ணெய் முதலியவற்றை நாணாது உண்டான், Naanaadhu Undaan - (களவுசெய்து) உட்கொண்டவனுமான எம்பெருமானது |