திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1521 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1521பெரிய திருமொழி || (6-8–மான் கொண்ட) (திரு நறையூர் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஜகத் ரஷணத்துக்காக முடி கவித்து மாலை இட்டுக் கொண்டு இருக்கிறவனை நாள் தோறும் ஸ்ரீ நித்ய சூரிகள் உடைய ஆசையே யாத்ரையாக உடையனாய்க் கொண்டு இங்கே காணப் பெற்றேன்) 4
ஒடாவரியாய் இரணியனை ஊன் இடந்த சேடார் பொழில் சூழ் திரு நீர் மலையானை வாடா மலர்த் துழாய் மாலை முடியானை நாடோறும் நாடி நறையூரில் கண்டேனே –6-8-4
பதவுரை Show / Hide
ஓடா அரி ஆய், Odaa Ari Aay - நாட்டில் நடையாடாத (விலக்ஷணமான) நரஸிம்ஹ ரூபியாகி (- (நறையூரில், கண்டேன்-.))
இரணியன் ஊனை இடந்த, Iraniyan Oonai Idantha - ஹிரண்யா ஸுரனுடைய உடலைக் கிழித்தொழித்தவனும்
சேடு ஆர் பொழில் சூழ், Seedu Aar Pozhil Soozh - இளமைபொருந்திய சோலைகளாலே சூழப்பட்ட
திருநீர்மலை யானை, Thiruneermalai Yaanai - திருநீர்மலையிலே ஸந்நிதி பண்ணியிருப்பவனும்
வாடா மலர் துழாய் மாலை முடியானை, Vaadaa Malar Thuzhai Maalai Mudhiyaanai - செவ்விகுன்றாத மலர்களையுடைய திருத்துழாய் மாலையைத் திருமுடியில் அணிந்தள்ளவனுமான எம்பெருமானை
நாள் தோறும் நாடி, Naal Thorum Naadi - நித்தியமும் தேடித்திரிந்து