திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1510 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1510பெரிய திருமொழி || (6-7–ஆளும் பணியும்) (திரு நறையூர் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவ்வம்பு கையிலே இருக்கச் செய்தே ஓர் இயற்றி இல்லாதாரைப் போலே மகா பலி பக்கலிலே சென்று மண்ணை இரந்தான்- சாமத்துக்குச் செல்லாத இடத்தில் யாய்த்து பேதத்தில் இழிவது) 3
தெள்ளார் கடல் வாய் விட வாய்ச் சின வாளரவில் துயில் அமர்ந்து துள்ளா வருமான் வீழ வாளி துரந்தான் இரந்தான் மாவலி மண் புள்ளார் புறவில் பூங்காவி புலன் கொள் மாதர் கண் காட்ட நள்ளார் கமல முகம் காட்டும் நறையூர் நின்ற நம்பியே –6-7-3
பதவுரை Show / Hide
தெள் ஆர் கடல் வாய், Thel Aar Kadal Vaai - தெளிவுடைய திருப்பாற்கடலில்
விடம் வாய, Vidam Vaai - விஷயத்தை உமிழாநின்ற வாயையுடையனாய்
சினம், Sinam - (பிரதிகூலர்மேல்) சீற்றமுடையனாய்
வாள், Vaal - ஒளிபொருந்தியவனான
அரவில், Aravil - திருவனந்தாழ்வான் மீது
துயில் அமர்ந்து, Thuyil Amarnthu - சயனித்தருள்பவனும்
துள்ளா வரு, Thulla Varu - (பஞ்சவடியில்) துள்ளிவிளையாடிக்கொண்டு வந்த
மான், Maan - (மாரிசனாகிற) மாயா மிருகம்
விழ, Vizh - மாளும் படி
வாளி துரந்தான், Vaali Thurandhaan - அம்பு எய்தவனும்
மாவலி, Mavali - மஹாபலியினிடத்து
மண் இரந்தான், Man Irandhaan - பூமியை யாசித்தவனுமான பெருமான்-
புள் ஆர் புறவில், Pul Aar Puravil - பட்சிகள் நிறைந்த புறர் சோலைகளிலே
பூ காவி, Poo Kaavi - அழகிய செங்கழுநீர்ப் பூக்கள்
புலன் கொள் மாதர், Pulan Kol Maathar - அழகிய ஸ்த்ரீகளுடைய
கண், Kan - கண்களை
காட்ட, Kaata - காட்டப்பெற்றதும்
நள் ஆர் கமலம், Nal Ar Kamalam - (இதழ்ச்) செறிவையுடைய தாமரைப்பூக்கள்
முகம் காட்டும், Mukam Kaatum - (அவர்களது) முகங்களைக் காட்டப் பெற்றதுமான