திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1493 | பெரிய திருமொழி || (6-5–கலங்க) (திரு நறையூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தான் மாதுலனாய் கண்ணநீரை விழ விட்டு துக்கம் கொண்டாடுவானாக மலை முறிந்து விழுமா போலே-அது விழும்படி பொருத ஆண் பிள்ளை வர்த்திக்கிற தேசம்) 6 | பகுவாய் வன் பேய் கொங்கை சுவைத்து ஆர் உயிர் உண்டு
புகுவாய் நின்ற போதகம் வீழப் பொருதானூர்
நெகுவாய் நெய்தல் பூ மது மாந்திக் கமலத்தின்
நகுவாய் மலர் மேல் அன்னம் உறங்கும் நறையூரே –6-5-6 | பதவுரை Show / Hideபகு வாய், Paghu Vaai - பெரிய வாயை யுடையவளும் வன, Vana - மனக்கொடுமையை யுடையவளுமான பேய், Pey - பேய்ச்சியாகிய பூதனையினுடைய கொங்கை, Kongai - ஸ்தனத்தை சுவைத்து, Suvaiththu - உறிஞ்சி ஆர் உயிர் உண்டு, Aar Uyir Undu - (அவளது) அருமையான உயிரை முடித்தவனும், புகு வாய், Puku Vaai - (கம்ஸ னரண்மையினுள்ளே) நுழைய வேண்டிய வாசலில் நின்ற, Nindra - (மதமூட்டி) நிறுத்தப்பட்டிருந்த போதகம், Pothagam - (குவலயாபீடமென்னும்) யானை வீழ, Veela - சாகும்படியாக பொருதான், Porudhaan - போர்புரிந்தவனுமான பெருமானுடைய ஊர், Oor - திவ்யதேசம் (எதுவென்றால்) அன்னம், Annam - ஹம்ஸங்களானவை நெகு வாய் நெய்தல் பூ, Neku Vaai Neiththal Poo - அலர்ந்த வாயையுடைய (விகஸித்த) கரு நெய்தற் பூக்களிலே மது, Madhu - தேனை மாந்தி, Maanthi - பருகி கமலத்தின் நகு வாய் மலர்மேல், Kamalaththin Nagu Vaai Malarmel - விரிந்த வாயையுடைய தாமரைப்பூக்களிலே உறங்கும், Uringum - கண்வளரப்பெற்ற நறையூர், Naraiyoor - திருநறையூர் |