திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1491 | பெரிய திருமொழி || (6-5–கலங்க) (திரு நறையூர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பரிமளம் மிக்கு இருந்துள்ள திருக் குழலை உடைய ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்காக ருஷபங்கள் ஏழையும் அழியச் செய்தவன் வர்த்திக்கிற தேசம்) 4 | உறியார் வெண்ணெய் உண்டு உரலோடும் கட்டுண்டு
வெறியார் கூந்தல் பின்னை பொருட்டு ஆன் வென்றானூர்
பொறியார் மஞ்ஞை பூம் பொழில் தோறும் நடமாட
நறு நாண் மலர் மேல் வண்டிசை பாடும் நறையூரே –6-5-4 | பதவுரை Show / Hideஉறி ஆர் வெண்ணெய் உண்டு, Uri Aar Vennai Undu - உறிகளிலே நிறைத்து வைத்த வெண்ணெயை வாரி உட்கொண்டு உரலோடும் கட்டுண்டு, Uralodum Kattundu - (அக்குற்றத்திற்காக) உரலோடு சேர்த்துக்கட்டப்பட்டவனும் வெறி ஆர் கூந்தல் பின்னை பொருட்டு, Veri Aar Koondhal Pinnai Poruttu - பரிமளம் மிக்க கூந்தலையுடையம நப்பி்ன்னை பிராட்டிக்காக ஆன் வென்றால், Aan Vendraal - (ஏழு) எருதுகளை வலியடக்கினவனுமான பெருமானுடைய ஊர், Oor - திவ்யதேசம் (எதுவென்றால்) பொறி ஆர் மஞ்ஞை, Pori Aar Manjai - புள்ளிகள் நிரம்பிய மயில்கள் பூ பொழில் தோறும்நடம் ஆட, Poo Pozhil Thorumnadam Aada - பூஞ்சோலைகளெங்கும் கூத்தாடப் பெற்றதும் வண்டு, Vandu - வண்டுகள் நறு நாள் மலர் மேல், Naru Naal Malar Mel - மணம்மிக்க அப்போதலர்ந்த பூக்களிலே இருந்துகொண்டு இசை பாடும், Isai Paadum - இசைப்பாட்டுகளைப் பாடப்பெற்றதுமான நறையூர், Naraiyoor - திருநறையூர். |