திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1484 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1484பெரிய திருமொழி || (6-4–கண்ணும் சுழன்று) (திரு நறையூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வேதத்தில் வாசனை போய் ஆசாரத்திலே ஏதேனும் ஓர் வைகல்யம் உண்டாய் இருக்கை அன்றிக்கே ஆசார பிரதானவர்கள் வர்த்திக்கிற தேசத்தை –நாமும் போய் ஆஸ்ரயிப்போம்) 7
வில்லேர் நுதலார் வேட்கையை மாற்றிச் சிரித்து இவன் பொல்லான் திரைந்தான் என்னும் புறனுரை கேட்பதன் முன்னம் சொல்லார் மறை நான்கோதி யுலகில் நிலா யவர் நல்லார் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே –6-4-7
பதவுரை Show / Hide
வில் ஏர் நுதலார், Vil Aer Nuthalaar - வில்போன்று அழகிய நெற்றியையுடையரான மாதர் (- (நாம் தொழுதும், நெஞ்சமே! எழு-.))
வேட்கையை மாற்றி, Vedkaitai Maatri - (முன்பு வைத்திருந்த) ஆசையைத் தவிர்த்து
சிரித்து, Siriththu - பரிஹாஸம்பண்ணி
இவன் பொல்லான், Ivan Pollaan - ‘இந்தக் கிழவன் பொல்லாதவன்’
திரைந்தான், Thiraindhaan - சதை சுருங்கினான்
என்னும், Ennum - என்று (இகழ்ந்து) சொல்லும்படியான
புறன் உரை, Puran Urai - இழிவான வார்த்தைகள
கேட்பதன் முன், Kaetpathan Mun - கேட்கநேருவதற்கு முன்னே,-
சொல் ஆர், Sol Aar - பதங்கள் நிரம்பிய
நான்கு மறை, Naanthu Marai - நான்கு வேதங்களையும்
ஓதி, Othi - அதிகரித்து
உலகில், Ulagil - இவ்வுலகில்
நிலாயவர், Nilayavar - (அவ்வேதங்களை) ஸ்தாபிக்கு மவர்களாய்
நல்லார், Nallaar - நல்லொழுக்கமுடையரான வைதிகர்வாழ்கிற
நறையூர், Naraiyoor - திருநறையூரை