திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1478 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1478பெரிய திருமொழி || (6-4–கண்ணும் சுழன்று) (திரு நறையூர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்படி ஜகதா காரணனாய் வேத பிரதிபாத்யன் ஆனவன்-சர்வம் கல்விதம் ப்ரஹ்ம-என்று இறே-சொல்லுகிறது – அந்த வேதோக்தமான சர்வ கர்ம சமாத்ராத்யன் ஆனவன் சம்சாரிகள் உடைய ரஷணத்துக்கு உறுப்பாக கிட்டி வர்த்திக்கிற ஸ்ரீ திரு நறையூரை ஆஸ்ரயிப்போம் ஒருப்படு என்று திரு உள்ளத்தோடு கூட்டுகிறார்) 1
கண்ணும் சுழன்று பீளையோடு ஈளை வந்து ஏங்கினால் பண்ணின் மொழியார் பைய நடமின் என்னாத முன் விண்ணும் மலையும் வேதமும் வேள்வியும் ஆயினான் நண்ணு நறையூர் நாம் தொழுதும் எழும் நெஞ்சமே –6-4-1
பதவுரை Show / Hide
பீளையோடு, Peelayodu - பிளிச்சையோடு கூட (- (திரஸ்கரித்துச்) சொல்வதற்கு முன்,-)
கண்ணம் சுழன்று, Kannam Suzhandru - கண்கள் சுழலமிட்டு
ஈளை வந்து, Eilai Vandu - கோழைமேலிட்டு
ஏங்கினால், Aenginaal - தளர்ச்சியடைந்தால், (அப்போது)
பண் இன் மொழியார், Pan In Mozhiyaar - இசைப்பாட்டுபோல் இனிமையான வாய் மொழியை யுடையமாதர் (நம்மை நோக்கி)
பைய நடமின் என்னாத முன், Paiya Nadamin Ennaadha Mun - ‘மெல்ல நடந்து செல்லுங்கள்’ என்று
விண்ணும், Vinnum - ஆகாசமும்
மலையும், Malaiyum - பர்வதங்களும்
வேதமும், Vedhamum - வேதங்களும்
வேள்வியும், Velviyum - யாகங்களும்
ஆயினான், Aayinaan - தானேயாயிருக்கு மெம்பெருமான்
நண்ணும், Nannum - விரும்பியுடையுமிடமான
நறையூர், Naraiyoor - திருநறையூரை
நெஞ்சமே, Nenjamai - ஓ மனமே!
நாம் தொழுதும், Naam Thozhudum - நாம் வணங்குவோம்;
எழு, Ezhu - எழுந்திரு