திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1474 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1474பெரிய திருமொழி || (6-3–துறப்பேன்) (திருவிண்ணகர் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நான் ஒரு அநந்ய கதி -என்கிறார்-இதர தேவதைகளை வாயாலே பேசேன் –-அவ்வளவே அன்றிக்கே நெஞ்சால் அவற்றுக்கு ஒரு ஆதிக்யம் உண்டாக நினையேன் ஆபாத ப்ரதீதியிலே அவற்றுக்கு ஒரு உத்கர்ஷம் உண்டாய்த் தோற்றிற்று ஆகிலும் அத்தை விச்வசியேன் – சர்வாதிகனாய் இருக்கிற நீ ஸ்ரீ திரு விண்ணகரிலே வந்து சந்நிஹிதன் ஆனாய் நீயே ஆஸ்ரயநீயன் என்று அறிவித்த பின்பு இனி உனக்கு விபூதி பூதரானார் பக்கல் பரத்வ பிரதிபத்தி பண்ணேன்) 7
வேறே கூறுவது உண்டு அடியேன் விரித்து உரைக்கு மாறே நீ பணியா தடை நின் திரு மனத்து கூறேன் நெஞ்சு தன்னால் குணம் கொண்டு மற்றோர் தெய்வம் தேறேன் உன்னை அல்லால் திருவிண்ணகரானே –6-3-7
பதவுரை Show / Hide
வேறே, Veerae - விலக்ஷணமாக (- (திரு விண்ணகரானே!- ;) (அடியேன்-;))
கூறுவது உண்டு, Koora Vudhu Undu - விண்ணப்பஞ் செய்வதொரு வார்த்தையுண்டு;
விரித்து உரைக்கும் ஆறே நீ பணியாது, Virithu Uraikkum Aarae Nee Paniyadhu - (நான்) விரிவாகக்கேட்க வேண்டும்படி நியமியாமல்
நின் திருமனத்து, Nin Thirumanaththu - உன் திருவுள்ளத்தில்
அடை, Aadai - ஸாரமாகக் கொண்டருள வேணும்;
உன்னை அல்லால், Unnai Allaal - உன்னையொழிய
மற்று ஓர் தெய்வம், Mattru Oor Deivam - வேறொரு தெய்வத்தை
கூறேன், Kooraen - வாய்விட்டுச் சொல்லமாட்டேன்;
குணம் கொண்டு, Gunam Kondu - (அவர்களிடத்தில்) குணவிசேஷத்தைக் கண்டாகிலும்
நெஞ்சு தன்னால், Nenju Thannal - நெஞ்சினால்
தேறேன், Theeraen - (அவர்களை ஆச்ரயணீயராக) விச்வஸிக்கமாட்டேன்.