திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1459 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1459பெரிய திருமொழி || (6-2–பொறுத்தேன்) (திருவிண்ணகர் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திரு மார்பா –உன்னுடைய ஸ்வா தந்த்ர்யத்தை அழித்து ஸ்வீகரிப்பிக்கும் ஸ்ரீ பிராட்டி அன்றோ அருகே இருக்கிறாள் – அவள் ஏதேனும் தப்புச் சொல்லிலும் விடேன் என்னும் நீயும்-உன் ஸ்வா தந்த்ர்யத்தை அழித்து உன்னை இட்டு ஸ்வீகரிப்பிக்கும் அவளும் இருவரும் இங்கே சந்நிதி பண்ணுகையாலே தேவர் திருவடிகளுக்கு தகுதியானேன் – கலங்கா பெரு நகரம் இருப்பாய் இருக்க அவ்விடத்தை விட்டு ஸ்ரீ பிராட்டியோடு கூட எய்த்தாரை எடுக்கைக்காக திரு விண்ணகரிலே சந்நிஹிதனாய் – நான் எய்த்துக் கொடு நின்றேன் – எய்த்தாருக்கும் எய்த்தாரை எடுக்க வந்து நிற்கிறவர்களுக்கும் ஒரு சேர்த்தி இல்லையோ) 2
மறந்தேன் உன்னை முன்னம் மறந்த மதியில் மனத்தால் இறந்தேன் எத்தனையும் அதனால் இடும்பை குழியில் பிறந்தே எய்த்து ஒழிந்தேன் பெருமான் திரு மார்பா சிறந்தேன் நின்னடிக்கே திரு விண்ணகர் மேயவனே –6-2-2
பதவுரை Show / Hide
உன்னை, Unnai - (எப்போதும் ஸ்மரிக்கத் தகுந்தவனான) உன்னை (- (திருவிண்ணகர் மேயவனே!- ;) (அதற்கு மேலே))
முன்னம், Munnam - முதலிலே
மறந்தேன், Marandhen - மறந்தொழிந்தேன்;
மறந்த மதி இல் மனத்தால், Maranda Mathi Il Manaththal - இப்படி மறந்தோமே! என்கிற அநுதாப வுணர்ச்சியுமில்லாத மனத்தையுடைமையினால்
எத்தனையும், Ethanaiyum - மிகவும் (அசித்தைக் காட்டிலும்)
இறந்தேன், Irandhen - நிஹீனனாகக் கெட்டுப் போனேன்;
அதனால், Adhanal - ஆகையினாலே
இடும்பை, Idumpai - துக்கங்களுக்கு ஆஸ்பதமான
குழியில், Kuzhiyil - கர்ப்பக் குழியில்
பிறந்தே, Pirandhe - இடைவிடாது ஜனன மரணங்களை யுடையனாய்க் கொண்டு
எய்த்து ஒழிந்தேன், Eyththu Ozhindhen - அனர்த்தப்பட்டுப் போனேன்;
திரு மார்பா பெருமான், Thiru Maarpaa Perumaan - பிராட்டியை மார்பிலே யுடைய பெருமானே!
நின் அடிக்கே, Nin Adikke - உனது திருவடிகளுக்கே
சிறந்தேன், Siranthen - (இப்போது) தகுந்தவனாக அமைந்தேன்.