திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1449 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1449பெரிய திருமொழி || (6-1–வண்டுணும்) (திருவிண்ணகர் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒரு கால் சொன்னத்தை ஒன்பதின் கால் சொல்லுகிறார் -பகவத் விஷய ருசியையும் தம்முடைய இந்த சம்சார அருசியை ஸ்திரம் என்னும் இடத்தை அவன் திரு உள்ளத்தே படுத்துகைக்காக) 2
அண்ணல் செய்து அலைகடல் கடைந்து அதனுள் கண்ணுதல் நஞ்சுண்ணக் கண்டவனே விண்ணவர் அமுதுண்ண வமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல் வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே –6-1-2
பதவுரை Show / Hide
அண்ணல் செய்து, Annal Seidhu - ‘தானே ஸர்வஸ்வாமி‘ என்பதைக் காட்டிக் கொண்டு (- (எம் பெருமானே!-;) (ஆண்டாய் * * * வேண்டேன்-.))
அலைகடல் கடைந்து, Alaikadal Kadaindhu - அலையெறிகின்ற கடலைக் கடைந்து
அதனுள் நஞ்சு, Adhanul Nanju - அக்கடலினின்று தோன்றின காலகூட விஷத்தை
நுதல் கண், Nuthal Kan - நெற்றிக்கண்ணனான ருத்ரன்
உண்ண, Unna - உட்கொள்ளும்படியாக
கண்டவனே, Kandavane - நியமித்தவனே!
விண்ணவர், Vinnavar - தேவர்கள்
அமுது உண, Amuthu Un - அம்ருதபாநம் பண்ணாநிற்க
அமுதில் வரும் பெண் அமுது, Amuthil Varum Pen Amuthu - அந்த அம்ருதத்திலிருந்து ஸாரமாகக் கிளர்ந்த பிராட்டியாகிற அம்ருதத்தை
உண்ட, Unda - அநுபவிக்கப் பெற்ற