திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1436 | பெரிய திருமொழி || (5-9–கையிலங்கு) (திருப்பேர் நகர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ப்ரஹ்மாதிகளிலும் காட்டில் கை வந்து இருக்கிற பிராமணர் ஆனவர்கள் சிருஷ்டி காலம் தொடங்கி ஸ்ரீ சர்வேஸ்வரன் உடன் ஒக்கக் குடி ஏறி ஜீவித்துப் போருகிறவர்கள் ஆய்த்து – சீலகுண பிரசுரராய் மிக்க தபசை உடையராய் இருக்கிற பிராமணர் ஹிருதயத்தை தனக்காக்கிக் கொண்டு இருக்கிறவன் என்னுடைய ஹிருதயஸ்தன் ஆனான்) 9 | நால் வகைவேதம் ஐந்து வேள்வி யாறங்கம் வல்லார்
மேலை வானவரில் மிக்க வேதியர் ஆதி காலம்
சேலுகள் வயல் திருப்பேர் செங்கண் மாலொடும் வாழ்வார்
சீல மா தவத்தர் சிந்தையாளி யென் சிந்தையானே –5-9-9 | பதவுரை Show / Hideநால் வகை வேதம், Naal Vagai Vedham - நான்கு வேதங்களிலும் ஆறு அங்கம், Aaru Angam - ஆறு வேதாங்கங்களிலும் ஐந்து வேள்வி, Ainthu Velvi - பஞ்சமஹாயஜ்ஞங்களிலும் வல்லார், Vallaar - ஸமர்த்தர்களாய். மேலை வானவரில் மிக்க தேவதியர், Melaivaanavaril Mikka Deivathiyar - மேலுலகத்திலுள்ள தேவர்களிற் காட்டிலும் மேம்பட்ட பிராமணோத்தமராய், ஆதி காலம், Aadhi Kaalam - வெகுகாலந்தொடங்கி சேல் உகள் வயல் திருப்பேர், Seyl Ugal Vayal Thiruppaer - மீன்கள் துள்ளுங் கழனிகளையுடைய திருப்பேர் நகரில் செம் கண் மாலோடும், Sem Kan Maalodum - செந்தாமரைக் கண்ணனான ஸர்வேச்வரனோடுகூட வாழ்வார், Vaazhvaar - நித்யவாஸம் பண்ணுமவராய் சீலம் மா தவத்தர், Seelam Maa Thavaththar - நற்குணமும் நல்லொழுக்கமுமுடையரான பிராமணருடைய சிந்தை ஆளி, Sindhai Aali - உள்ளத்தை (த்தனக்கு இருப்பிடமாகக்கொண்டு) ஆள்கின்ற எம்பெருமான் என் சிந்தையான், En Sindhaiyaan - என்னுடைய ஹ்ருதயத்தில் நித்யவாஸம் பண்ணுமவன். |