திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1434 | பெரிய திருமொழி || (5-9–கையிலங்கு) (திருப்பேர் நகர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சாமான்யன் என்று இடுமீடு எல்லாம் இட அமையும் -என்று இருப்பாரைப் போலே வேறு ஒரு ஹேதுவைச் சொல்லி அன்றியே இது சொல்லியே நம்மைக் கட்டுவதே என்று இசைந்து இருந்தான் ஆய்த்து) 7 | வெண்ணெய் தான் அமுது செய்ய வெகுண்டு மத்தாய்ச்சி ஓச்சிக்
கண்ணியார் குருங்கயிற்றால் கட்ட வெட்டென்று இருந்தான்
திண்ண மா மதிள்கள் சூழ்ந்த தென் திருப் பேருள் வேலை
வண்ணனார் நாமம் நாளும் வாய் மொழிந்து உய்ந்தவாறே –5-9-7 | பதவுரை Show / Hideதான், Thaan - யசோதை நோன்பு நோற்றுப் பெற்ற பிள்ளையாகிய தான் வெண்ணெய் அமுது செய்ய, Vennai Amuthu Seyya - வெண்ணெயை (அளவில்லாதபடி திருடி) உண்டவளவிலே ஆய்ச்சி, Aaychi - யசோதையானவள் வெகுண்டு, Vegundu - சீற்றங்கொண்டு மத்து ஓச்சி, Maththu Ochi - தயிர்கடையும் மத்தினால் அடிப்பதாக ஓங்கி கண்ணி ஆர் குறுகயிற்றால் கட்ட, Kanni Ar Kurugayitral Katta - முடிச்சுகள் நிறைந்த சிறிய தாம்பினால் கட்டிவைக்க வெட்டென்றிருந்தான், Vettenthirundhaan - இசைந்திருந்தவனும்:- திண்ணம் மா மதிள்கள் சூழ்ந்த, Thinnam Maa Mathilgal Soozhntha - திடமான பெரிய மதிள்களாலே சூழப்பட்ட தென் திருப்பேருள், Then Thirupperal - தென் திருப்பேர் நகரில் எழுந்தருளியிருக்கிறவனும் வேலை வண்ணனார், Vela Vannanaar - கடல்போன்ற நிறத்தையுடையனுமான பெருமானுடைய நாமம், Naamam - திருநாமங்களை நாளும், Naalum - நாள்தோறும் வாய் மொழிந்து, Vaai Mozhinthu - சொல்லி உய்ந்த ஆறு ஏ, Uyandha Aaru Ae - நான் உஜ்ஜீவித்தபடி என்னே!- |