திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1430 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1430பெரிய திருமொழி || 3
ஒருவனை யுந்திப் பூ மேல் ஓங்குவித் தாகம் தன்னால் ஒருவனைச் சாபம் நீக்கி உம்பராள் என்று விட்டான் பெருவரை மதிள்கள் சூழ்ந்த பெரு நகர ரவணை மேல் கருவரை வண்ணன் தன் பேர் கருதி நான் உய்ந்தவாறே –5-9-3
பதவுரை Show / Hide
ஒருவனை உந்தி பூ மேல் ஓங்குவித்து, Oruvanai Undhi Poo Mel Onguvidhu - நான்முகனாகிய ஒருவனை திருநாபிக் கமலத்தில் உண்டாக்கினவனும் (- (நான் உய்ந்த ஆறு ஏ–.))
ஒருவனை, Oruvanai - ருத்ரனாகிய ஒருவனை
ஆகம் தன்னால், Aagam Thannal - (தனது) திருமார்பிலுண்டான ஸ்வேதஜலத்தாலே
சாபம் நீக்கி, Saapam Neekki - (அவனுடைய பிரமஹத்தி சாபத்தைத் தொலைத்து
உம்பர் ஆள், Umbar Aal - (நீ முன் போலவே) மேலுலகங்களை ஆளக்கடவாய்
என்று விட்டான், Endru Vittaan - என்று விடை கொடுத்தவனும்
பெரு வரை மதில்கள் சூழ்ந்த, Peru Varai Mathilgal Soozhntha - பெரிய மலைகள் போன்ற திருமதிள்களாலே சூழப்பட்ட
பெரு நகர், Peru Nagar - திருப்பேர்நகரில்
அரவு அணை மேல், Aravu Anai Mel - சேஷ சயனத்தின் மீது
கருவரை வண்ணன் தன் பேர், Karuvurai Vannan Than Peer - கரியமலை யொன்று சாய்ந்தாற்போன்றுள்ளனனுமான பெருமானடைய திருநாமங்களை
கருதி, Karuthi - சிந்தித்து