திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1429 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1429பெரிய திருமொழி || 2
வங்கமார் கடல்கள் ஏழும் மலையும் வானகமும் மற்றும் அங்கண் மா ஞாலம் எல்லாம் அமுது செய்து உமிழ்ந்த வெந்தை திங்கள் மா முகிலணவு செறி பொழில் தென் திருப்பேர் எங்கள் மால் இறைவன் நாமம் ஏத்தி நான் உய்ந்தவாறே –5-9-2
பதவுரை Show / Hide
வங்கம் ஆர் கடல்கள் ஏழும், Vangam Aar Kadalgal Ezhum - மரக்கலங்கள் நிறைந்திருக்கப்பெற்ற ஸப்த ஸாகரங்களும்
மலையும், Malaiyum - குலபர்வதங்களும்
வானகமும், Vaanagamum - ஆகாசமும்
மற்றும், Mattrum - அதற்குமேலே
அம் கண் மா ஞாலம், Am Kan Maa Nyaalam - அழகிய இடமுடைத்தான பரந்தபூமியும் (ஆகிய
எல்லாம், Ellam - எல்லாவற்றையும்
அமுது செய்து, Amuthu Seidhu - (பிரளயகாலத்தில்) விழுங்கி
உமிழ்ந்த, Umizhndha - பிறகு வெளிப்படுத்தின
எந்தை, Endhai - ஸ்வாமியும்
திங்கள் மா முகில் அணவு, Thingal Maa Mukil Anavu - சந்திர மண்டலத்தையும் மேக மண்டலத்தையும் அளாவியிருக்கிற
செறி பொழில், Serri Pozhil - நெருங்கிய சோலைகளையுடைத்தான
தென் திருப்பேர், Then Thiruppaer - தென் திருப்பேர் நகரில் எழுந்தருளியிருக்கிற
எங்கள் மால், Engal Maal - எம்பெருமானுமாகிய
இறைவன், Iraivan - ஸர்வேச்வரனுடைய
நாமம் ஏந்தி, Naamam Aendhi - திருநாமங்களைத் துதித்து
நான் உய்ந்த ஆறு ஏ, Naan Uyndha Aaru Ae - நான் வாழ்ந்தவிதம் என்னே!.