திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1426 | பெரிய திருமொழி || (5-8–ஏழை ஏதலன்) (திருவரங்கம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கீழ் இரண்டு பாட்டாலே அவனுடைய-சக்தி யோகத்தைச் சொல்லி-உபாய பூர்த்தியைச் சொல்லிற்றாய் நின்றது – இப்பாட்டுக்கு உதயம் என் என்னில் சம்சாரத்தின் உடைய தண்மையையும்-நம்முடைய அதிசய சக்தி த்வத்தையும் அனுசந்தித்து த்வரிக்கை யாகிற் இது ஔபாதிகம் காணும்-நாம் செய்தபடி கண்டிருக்குமது காணும் உமக்கு ஸ்வரூபம் -என்ன உன்னை அல்லது அறியாத தொண்டைமான் சக்கரவர்த்திக்கு ஸ்வரூப ஜ்ஞானத்தை உண்டாக்கினால் போலே எனக்கும் ஸ்வரூப ஜ்ஞானத்தை உண்டாக்க வேணும் என்று சரணம் புகுகிறார் – கீழே நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் -என்று திரு மந்த்ரத்தை சார்த்தமாக லபித்து உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்று ததீய சேஷத்வ பர்யந்தமாக அனுசந்தித்தார் – அதின் முன்பு ஸ்வரூப ஜ்ஞானம் பிறந்தது இல்லையோ -என்னில் தம்தாமுக்கு பிறக்கும் ஜ்ஞானம் விச்வச நீயம் அன்று என்று காணும் இருக்க அடுப்பது ஸ்ரீ நாரத பகவானை இட்டு ஸ்ரீ புண்டரீகனுக்கு-கிந்தத்ர-என்றும்-நராஜ்ஜா தாநி-என்றும் திரு மந்த்ரத்தை சார்த்தமாக உபதேசித்து பிராப்தி வேளையில் உனக்கு வேண்டுவது என் என்று ஈஸ்வரன் கேட்க க்வாஹமத்யந்த துர்ப்புத்தி -என்றான் இறே சர்வ அபிமத சாதனம் இறே சரணா கதி யாகிறது) 9 | துளங்கு நீண் முடி யரசர் தம் குரிசில் தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு
உளம் கொள் அன்பினோடு இன்னருள் சுரந்து அங்கோடு நாழிகை ஏழு உடன் இருப்ப
வளம் கொள் மந்திரம் மற்று அவர்க்கு அருளிச் செய்தவாறு அடியேன் அறிந்து உலகம்
அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே –5-8-9 | பதவுரை Show / Hideதுளங்கு, Thulangu - விளங்குகின்ற (- (அணி பொழில் திரு அரங்கத்து அம்மானே!–;) (உலகம் அளந்த பொன் அடியே அடைந்து உய்ந்தேன்–.-)) நீள் முடி, Neel Mudi - நீண்ட கிரீடத்தையுடைய அரசர் தம் குரிசில், Arasar Tham Kurisil - அரசாகட்கு அரசனாகிய திண்திறல், Thinthiral - மிக்க வலிமையையுடைய தொண்டை மன்னவன் ஒருவற்கு, Thondai Mannavan Oruvarukku - தொண்டை நாட்டரச னொருவனிடத்தில் உளம் கொள் அன்பினோடு இன் அருள் சுரந்து, Ulam Kol Anbinodu In Arul Surandhu - (நீ உன்) திருவுள்ளத்திற்கொண்ட அன்புடனே இனிமையான கருணையை மிகுதியாகச்செய்து, அங்கு ஓடு நாழிகை ஏழுடன் இருப்ப, Angu Odu Naazhigai Ezhuudan Iruppa - அரசாளுதலாகிய இம்மைச் செல்வத்திலே வீணே கழிகின்ற அவனது நாழிகையானது (அங்ஙனம் கழியாது) ஏழு தத்துவப் பொருள்களுடனே கூடியிருக்கும்படி வளம்கொள் மந்திரம், Valamkol Manthiram - சிறப்புக்கொண்ட பெரிய திருமந்திரத்தையும் மற்று, Mattru - மற்றும் அதன் பொருளையும் அவற்கு அருளிச் செய்த, Avarukku Arulich Seidha - அத் தொண்டைமான் சக்ரவர்த்திக்கு உபதேசித்தருளிய ஆறு, Aaru - வகையை அடியேன் அறிந்து, Adiyen Arindhu - அடியேன் தெரிந்து கொண்டு |