திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1421 | பெரிய திருமொழி || (5-8–ஏழை ஏதலன்) (திருவரங்கம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (விஷயீகாரம் சொல்லி-விஷயீகார கார்யமான கைங்கர்யம் சொல்லி அதுக்கு இடைச் சுவரான தேக சம்பந்தத்தை அறுத்துத் தர வேணும்என்கிறதே -இரண்டு பாட்டாலே – அதில் தேக சம்பந்தம் கிடக்கச் செய்தே அனுபவ விரோதியான பாபைகதேச பலமான இந்த்ரிய வஸ்யதையைப் இதில் சரீர சம்பந்தம் அற்றால்-சர்வ பாப பலமாய் அனுபவ விரோதியாய்க் கொண்டு வரும் யம வஸ்யதையை தவிர்க்க வேணும் -என்கிறார் – ஸூமுகனுக்கு பெரிய திருவடியால் வந்த பயத்தை தவிர்த்துக் கொடுத்தால் போலே எனக்கு எம வச்யதையால் வந்த பயத்தை அறுத்து அவனை இட்டே பரிஹர -என்னும்படி பண்ணித் தர வேணும் -என்கிறார் சரணம் புகுவார் தாம்தாம் உடைய நிகர்ஷத்தை முன்னிட்டுக் கொண்டு இறே சரணம் புகுவது – அந்நிகர்ஷம் தான் ஆகிஞ்சந்ய ரூபமாயும்-அபராத ரூபமாயும் இறே இருப்பது அதாகிறது-அது தன்னை அனுசந்தித்தார் இறே அடைவே ந தர்ம நிஷ்டோச்மி-ந நிந்திதம் கர்ம-ஜ்ஞான கிரியாச பஜநா-இத்யாதிகளும் ஆகிஞ்சன்யத்தை முன்னிட்டது கீழ்–இதில் அபராதத்தை முன்னிடுகிறது) 4 | நஞ்சு சோர்வதோர் வெஞ்சின வரவம் வெருவி வந்து நின் சரண் எனச் சரணாய்
நெஞ்சில் கொண்டு நின் அஞ்சிறைப் பறவைக்கு அடைக்கலம் கொடுத்து அருள் செய்தது அறிந்து
வெஞ்சொல் ஆளர்கள் நமன் தமர் கடியர் கொடிய செய்வன யுளவதற்கு அடியேன்
அஞ்சி வந்து நின்னடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –5-8-4 | பதவுரை Show / Hideநஞ்சு சோர்வது, Nanju Soorvathu - விஷத்தை உமிழ்வதும் (- (அணி பொழில் திரு அரங்கத்து அம்மானே-;) (அதற்கு அஞ்சி வந்து நின் அடி இணை அடைந்தேன்–.)) வெம் சினம், Vem Sinam - கொடிய கோபத்தையுடையதுமான ஓர் அரவம், Oru Aravam - (சுமுகனென்னும்) ஒரு பாம்பானது வெருவி, Veruvi - (தன்னைக்கொல்ல விருக்கின்ற கருடனுக்கு) அஞ்சி வந்து, Vandhu - உன்னிடத்தில் வந்து நின் சரண் என, Nin Saran Ena - ‘உனக்கு அடைக்கலப் பொருளாகின்றேன் யான்’ என்று சொல்லி உன்னைச் சரணமடைய, சரண் ஆய், Saran Aay - நீ அதற்கு ரக்ஷகனாகி நெஞ்சில் கொண்டு, Nenjil Kondu - (அவனுக்கு நெர்ந்த துன்ப நிலையையும் அவன் சொல்லையும்) உன் திருவுள்ளத்திற்கொண்டு நின் அம் சிறை பறவைக்கு அடைக்கலம் கொடுத்து அருள் செய்தது, Nin Am Sirai Paravaikku Adaikalam Koduthu Arul Seithathu - உனது அடியவனான அழகிய இறகுகளையுடைய கருடனிடத்தில் (அப்பாம்பை) அடைக்கலப் பொருளாக நீ ஒப்பித்துப் பாதுகாத்தருளிய திறத்தை அடியேன் அறிந்து, Adiyen Arindhu - அடியேன் தெரிந்து கொண்டு, வெம் சொலாளர்கள், Vem Solalargal - கொடிய சொற்களைச் சொல்பவர்களான நமன் தமர், Naman Thamar - யமதூதர்கள் கடியர், Kadiyar - பயங்கரமான தோற்றமுடையவர்களாய் செய்வன, Seivan - (மரணகாலத்திலும் மறுமையிலும்) செய்பவையான கொடிய, Kodiy - கொடுந்தொழில்கள் உள், Ul - பலவுளவன்றோ; |