திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1403 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1403பெரிய திருமொழி || (5-6–கைம்மானம்) (திருவரங்கம் 3) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (த்வேஷத்தை தவிர்ந்து-தன்னை அடைந்தவர்கள் உடைய ஸ்வ பிராப்தி உபாயத்தை தானே நிர்வஹித்துக் கொடுக்குமவனை – த்வேஷமேயாய் இருப்பார் அளவில் இருக்கும் படி – ஸ்ரீ தேவகியாரையும் ஸ்ரீ வசுதேவரையும் நலியப் புக்க வாறே அத்தைப் பொறாதே இனி அரை ஷணம் இவனை வைக்க ஒண்ணாது என்று அவனைக் கொன்றான் ஆய்த்து- த்வேஷமும் பண்ணாதே தன்னை அடைவதும் செய்யாதே இருப்பார் அளவில் இருக்கும் படி ஆபத்தை அடையாளமாக ரஷிக்கும் இத்தனை யாய்த்து-தான் அறிந்த சம்பந்தத்தையே பார்க்கும் இத்தனை – கற்பகத்தை –இப்படி உபகரித்தோம் என்று நினைத்து இராதவனை) 6
தஞ்சினத்தை தவிர்த்து அடைந்தார் தவ நெறியைத் தரியாது கஞ்சனைக் கொன்று அன்று உலகம் உண்டு உமிழ்ந்த கற்பகத்தை வெஞ்சினத்த கொடும் தொழிலான் விசையுருவை யசைவித்த அஞ்சிறைப் புட்பாகனை யான் கண்டது தென்னரங்கத்தே –5-6-6
பதவுரை Show / Hide
தம் சினத்தை தவிர்த்து அடைந்தார், Tham Sinaththai Thavirthu Adaindhaar - தங்களுடைய த்வேஷத்தை நீக்கிவிட்டுத் தன்னைவந்து பற்றினவர்களுக்கு (- (யான் கண்டது தென் அரங்கத்தே–.))
தவம் நெறியை, Thavam Neriyai - உபாய மார்க்கமாயிருப்பவனும்,
தரியாது, Thariyadhu - (தீம்புகளைப்) பொறுத்திருக்க மாட்டாமல்
கஞ்சனை கொன்று, Kanjanai Konru - கம்ஸனைக் கொன்றொழித்தவனும்,
அன்று, Andru - முன்பொருகாலத்தில்
உலகம், Ulagam - உலகங்களை
உண்டு உமிழ்ந்த கற்பகத்தை, Undu Umizhndha Karppagaththai - உண்பதும் வெளிப்படுத்துவதும் செய்த உதாரனும்
வெம் சினத்த கொடும் தொழிலோன், Vem Sinathth Kodum Thozhilon - வெவ்விய கோபத்தினால் செய்யக்கூடிய ஸம்ஹாரத் தொழிலையுடையனான ருத்ரனுடைய
விசை உருவை, Visai Uruvai - மிக்க வேகத்தோடு கூடின வடிவை
அசைவித்த, Azaiviththa - (பாணாஸுர யுத்தத்தில் சலிக்கச் செய்தவனும்)
அம் சிறை புள் பாகனை, Am Sirai Pul Paaganai - அழகிய சிறகுடைய பெரிய திருவடியை ஏறி நடத்துபவனுமான பெருமானை