திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1378 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1378பெரிய திருமொழி || (5-4–உந்திமேல்) (திருவரங்கம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சர்வ ஸ்ரஷ்டாவாய் ஆபத் சகனுமாய் இருக்கும் இருப்பைக் காட்டி என் குலத்துக்கு நாதன் ஆனவன் – அடியார்களை குழாங்களை– உடன் கூடுவது என்று கொலோ -என்று சொல்லும் ஸ்ரீ நித்ய சூரிகளும் இவ்விடத்தை விரும்பி இங்கே படுகாடு கிடப்பார்கள் ஆய்த்து) 1
உந்தி மேல் நான் முகனைப் படைத்தான் உலகுண்டவன் எந்தை பெம்மான் இமையோர்கள் தாதைக்கு இடம் என்பரால் சந்தினொடு மணியும் கொழிக்கும் புனல் காவிரி அந்தி போலும் நிறத்தார் வயல் சூழ் தென்னரங்கமே –5-4-1
பதவுரை Show / Hide
சந்தினோடு மணியும் கொழிக்கும், Sandhinodu Maniyum Kozhikkum - சந்தனக்கட்டைகளையும் நவரத்னங்களையும் தள்ளிக்கொண்டு பெருகுகின்ற
புனல், Punal - தீர்த்தத்தை யுடைத்தான
காவிரி, Kaviri - திருக்காவிரி நதியாலும்
அந்தி போலும் நிறத்து ஆர் வயல், Andhi Polum Nirathu Ar Vayal - ஸந்தியாகாலம் போன்ற வர்ணத்தையுடைய கழினிகளினாலும்
சூழ், Sool - சூழப்பட்ட
தென் அரங்கம், Then Arangam - திருவரங்கமானது;–
உந்தி மேல் நான் முகனைபடைத்தான், Undhi Mel Naan Muganaipadaiththan - (தனது) திருநாபியிலே பிரமனை ஸ்ருஷ்டித்தவனும்
உலகு உண்டவன், Ulaku Undavan - (பிரளயகாலத்தில்) லோகங்களை அமுது செய்தவனும்
எந்தை பெம்மான், Endhai Pemmaan - எம் குலத்துக்கு நாதனானவனும்
இமையோர்கள் தாதைக்கு, Imaiyorkal Thathaikku - நித்யஸூரிகளுக்குத் தலைவனுமான பெருமானுக்கு
இடம், Idam - வாஸஸ்தலம்
என்பர், Enbar - என்று சொல்லுவர்கள்