திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1370 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1370பெரிய திருமொழி || (5-3–வென்றி) (திரு வெள்ளறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திரு வாழியைக் கொண்டு கார்யம் செய்யப் பெறாத படி அவன் வரம் பெற்று இருக்கையாலே ஸ்ரீ திரு உகிரே ஆயுதமாகக் கொண்டு வ்யாபரித்தவனே – என்னுடைய விரோதியைப் போக்கி என் பக்கலிலே கிருபையைப் பண்ணி அருள வேணும்) 3
வெய்யனாய் உலகு ஏழு உடன் நலிந்தவன் உடலம் இரு பிளவாகக் கையில் நீள் உகிர் படையது வாய்த்தவனே எனக்கு அருள் புரியே மையினார் தரு வரால் இனம் பாய வண் தடத்திடைக் கமலங்கள் தெய்வம் நாறும் ஒண் பொய்கைகள் சூழ் திரு வெள்ளறை நின்றானே –5-3-3
பதவுரை Show / Hide
மையின் ஆர் தரு, Maiyin Ar Tharu - கருநிறத்தினால் பூர்ணமான (- (திருவெள்ளறை, நின்றானே!;))
வரால் இனம், Varal Inam - வரால் மீன்களின் திரள்
வண் தடத்திடை பாய, Van Thadathidai Paaya - அழகிய தடாகங்களிலே துள்ளி விளையாடப்பெற்றதும்,
கமலங்கள் தெய்வம் நாறும், Kamalangal Deivam Naarum - தாமரைப் பூக்கள் திவ்யமான வாஸனை வீசாநின்ற
ஒண் பொய்கைகள், On Poigaihal - அழகிய பொய்கைகளினால்
சூழ், Sool - சூழப்பட்டதுமான
வெய்யன் ஆய் உலகு ஏழ் உடன் நலிந்தவன், Veyyan Aayi Ulaku Ezhu Udan Nalindhavan - மிகவும் க்ரூரனாயிருந்து கொண்டு ஸப்த லோகங்களையும் ஒருங்கே ஹிம்ஸித்துக்கொண்டிருந்த இரணியனுடைய
உடலகம் இரு பிளவு ஆ கையில், Udalagam Iru Pilavu Aa Kaiyil - மார்பு இரண்டு கூறாம்படி திருக்கைகளில்
நீள் உகிர் படை அது வாய்த்தவனே, Neel Ukir Padai Adhu Vaiththavaney - நீண்ட நகங்களையே ஆயுதமாகப் பெற்றவனே!
எனக்கு அருள்புரி, Enakku Arulpuriy - அடியேன் மீது க்ருபை பண்ணவேணும்