திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1366 | பெரிய திருமொழி || (5-2–தாந்தம்) (திரு கூடலூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆற்றுப் பெருக்கு போலே பெருகா நின்றுள்ள காதலை உடைய அடியேனுடைய ஹிருதயமானது உருகும்படியாகப் புகுந்த அத்விதீயனானவன் வர்த்திக்கிற தேசம்) 9 | பெருகு காதல் அடியேன் உள்ளம்
உருவப் புகுந்து ஒருவரூர் போல்
அருகு கைதை மலரக் கெண்டை
குருகு என்றும் அஞ்சும் கூடலூரே –5-2-9 | பதவுரை Show / Hideபெருகு காதல், Perugu Kaadhal - வளர்ந்துவரும் ஆசையையுடையேனான (- (கூடலூர்)) அடியேன், Adiyen - அடியேனுடைய உள்ளம், Ullam - மனமானது உருக, Uruga - கரையும்படியாக புகுந்த, Pugundha - உள்ளே பிரவேசித்திருக்கிற ஒருவர், Oruthar - விலக்ஷண புருஷனுடைய ஊர், Oor - திவ்யதேசம்; அருகு, Aruga - ஸமீபத்திலே கைதை, Kaithai - தாழைகள் மலர, Malara - மலர்ந்திருக்க (அதனைக் கண்டு) கெண்டை, Kendai - கெண்டை மீன்கள் குருகு என்று அஞ்சும், Kurugu Endru Anjum - (தம்மைப் பிடித்துண்ண வந்திருக்கிற) நாரைகளென்றெண்ணி அஞ்சுமிடமான |