திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1356 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1356பெரிய திருமொழி || (5-1–அறிவது) (திருபுள்ளம் பூதங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆச்சார்ய அனுவர்த்தனம் பண்ணிக் கேட்கைக்கு அநாதிகாரிகளாய் இருக்கவும் கூடும் -என்று திர்யக் வேஷ பரிக்ரஹம் பண்ணினான் ஆய்த்து – ஸ்ரீ சாரதியாய் நின்று உபதேசித்தால் போலே – அசூரர்களோடே கலந்து உரு மாய்ந்து போனத்தை பிரிக்கைக்காக நீரையும் பாலையும் பிரிக்கும் பதார்த்தத்தின் வடிவைக் கொண்டான் ஆய்த்து – பிரத்யுபகார நிரபேஷமாகவும்-உபகரித்த சுத்தியும் ஒரு சுத்தியே – சிலர் அபேஷிக்க அன்றிக்கே தன் பேறாக உபகரித்தான் ஆய்த்து) 9
துன்னி மண்ணும் விண்ணாடும் தோன்றாது இருளாய் மூடிய நாள் அன்னமாகி அருமறைகள் அருளிச் செய்த அமலன் இடம் மின்னு சோதி நவ மணியும் வேயின் முத்தும் சாமரையும் பொன்னும் பொன்னி கொணர்ந்து அலைக்கும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-9
பதவுரை Show / Hide
மண்ணும் விண்நாடும் தோன்றாது, Mannum Vinnadum Thondrathu - மண்ணுலகமும் விண்ணுலகமும் ஒன்றும் தெரியாதபடி
இருள் ஆய் துன்னி மூடிய நாள், Irul Aay Thunni Moodiya Naal - அந்தகாரமேயாய் நெருங்கி மூடிக்கிடந்த வளவிலே
அன்னம் ஆகி அருமறைகள் அருளிச்செய்த, Annam Aagi Arumaraigal Arulichcheytha - ஹம்ஸரூபியாய் அவதரித்து அருமையான வேதங்களை மீண்டும் வெளிப்படுத்தியருளின
அமலன், Amalan - பவித்திரனான பெருமானுடைய
இடம், Idam - இருப்பிடமாவது
மின்னு சோதி நவமணியும், Minnu Sothi Navamaniyum - விளங்குகின்ற தேஜஸ்ஸையுடைய நவரத்நங்களையும்
வேயின் முத்தும், Veyin Muthum - மூங்கில் முத்துக்களையும்
சாமரையும், Samaraiyum - சாமரங்களையும்
பொன்னும், Ponnum - பொன்களையும்
பொன்னி கொணர்ந்து அலைக்கும், Ponni Konarnthu Alaikkum - காவேரியானது தள்ளிக் கொண்டுவந்து அலையெறியப் பெற்ற  புள்ளம் பூதங்குடி