திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1333 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1333பெரிய திருமொழி || (4-9–நும்மைத் தொழுதோம்) (திருவிந்தளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவள் ஏகோந சேஷி யாகையாலே அவன் வரும் வரை காத்து இருக்க வேணும் உம்மை அரை ஷணமும் காணாவிடில் ஜீவிக்க மாட்டாத அடியேனையும் அவள் முன்னாகப் பற்றினார்க்கு இத்தனை வாசி உண்டு போலே காணும் சர்வஞ்ஞனையும் அஞ்ஞன் ஆக்க வேண்டும்படி காணும்-இவருடைய பிரகிருதி மார்த்தவம் தம்மை ஆசைப் பட்டார் பருவம் அறிந்து முகம் காட்டிற்றிலர் என்னும்அவத்யத்தை பரிஹரிகைக்கு அன்றோ நீர் ஸ்ரீ திரு இந்தளூரிலே வந்து நிற்கிறது-போந்த கார்யத்தை மறக்கிறது என்) 6
சொல்லாது ஒழிய கில்லேன் அறிந்த சொல்லில் நும் அடியார் எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் நமக்கு இவ் உலகத்து எல்லாம் அறிவீர் ஈதே அறியீர் இந்தளூரீரே –4-9-6
பதவுரை Show / Hide
சொல்லாது ஒழிய கில்லேன், Sollaadhu Ozhiyakilleen - (அடியேன் சொல்ல நினைத்ததைச்) சொல்லாதிருக்க முடியவில்லை; (- (இந்தளூரீர்!–;))
அறிந்த சொல்லில், Arindha Sollil - நான் அறிந்தவற்றைச் சொல்லத் தொடங்கினால்
(இதனைச் சொல்லுகிறேன் கேளீர்;), Idhanaich Sollugiren Kelir - இவ்வுலக நடை யெல்லாமும் தெரிந்துகொண்டிருக்கிறீர்;
அடியேனை, Adiyenai - (உம்மைப் பிரிந்து தரிக்க மாட்டாத) அடியேனை
நும் அடியார் எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர், Num Adiyaar Ellaarodum Okka Enni Irundheer - உம்முடைய மற்ற அடியவர்கள் எல்லாரோடும் ஸமமாக நினைத்திருக்கிறீர்;
நல்லார் அறிவீர், Nallaar Ariveer - நல்லவர்களையும் தெரிந்து கொண்டிருக்கிறீர்;
தீயார் அறிவீர், Theeyaar Ariveer - தீயவர்களையுந் தெரிந்து கொண்டிருக்கிறீர்;
இ உலகத்து எல்லாம் அறிவீர், I Ulakaththu Ellam Ariveer - இவ்வுலக நடையெல்லாமும் தெரிந்துகொண்டிருக்கிறீர்;
நமக்கு ஈதே அறியீர், Namakku Eedhe Ariyeer - என்னுடைய தன்மையொன்றையே அறியமாட்டாதவராயிருக்கிறீர்.