திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1308 | பெரிய திருமொழி || (4-7–கண்ணார் கடல்) (திருநாங்கூர்த் திருவெள்ளக்குளம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பய பிரசங்கம் இல்லாத தேசத்திலே இருக்கிற நிருபாதிக பந்துவே புறம்பு புகல் உண்டு என்று இருக்கில் அன்றோ ஆறி இருக்கலாவது-அநந்ய கதியாய் இருக்கிற என் இடரைக் களையாய் – இவ்வடிவை அனுபவிக்கையை இழக்கப் போமோ) 1 | கண்ணார் கடல் போல் திருமேனி கரியாய்
நண்ணார் முனை வென்றி கொள்வார் மன்னு நாங்கூர்த்
திண்ணார் மதிள் சூழ் திரு வெள்ளக் குளத்து
வண்ணா வடியேன் இடரைக் களையாயே –4-7-1 | பதவுரை Show / Hideகண் ஆர் கடல் போல் திருமேனி கரியாய், Kan Aar Kadal Pol Thirumeni Kariyai - இடமுடைத்தான கடல்போலே திருமேனி கறுத்திருக்கப்பெற்றவனே! நண்ணார் முனை, Nannaar Munai - சத்துருக்களுடைய யுத்தத்திலே வென்றி கொள்வார், Vendri Kolvaar - வெற்றிபெறுமவர்களான அந்தணர்கள் மன்னு, Mannu - வாழ்கிற நாங்கூர், Naangoor - திருநாங்கூரில் திண் ஆர் மதிள் சூழ், Thin Aar Mathil Soozh - திடமான மதிளாலே சூழப்பட்ட திருவெள்ளக்குளத்துள், Thiruvellakkulathul - திருவெள்ளக்குளமென்னுந் திருப்பதியில் எழுந்தருளியிருக்கிற அண்ணா, Anna - அண்ணனே! அடியேன் இடரை களையாய், Adiyen Idarai Kalaiyai - அடியேனுடைய துன்பங்களை ஒழித்தருள வேணும் |