திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1298 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1298பெரிய திருமொழி || (4-6–தாவளந்து) (திருநாங்கூர்க் காவளம்பாடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (முதலையாலே இடர்பட்ட யானை தன்னை நோக்கிக் கொள்ளுதல் அம்முதலை இத்தை நோக்குதல் செய்ததோ பாதகமானது ரஷகம் ஆக மாட்டாதே அந்த ஆனையினுடைய ஸ்தானே யாய்த்து நான் முதலையினுடைய ஸ்தானே யாய்த்து பிறர்) 1
தா வளந்துலகம் முற்றும் தட மலர்ப் பொய்கை புக்கு நாவள நவின்று அங்கே ஏத்த நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய் மாவளம் பெருகி மன்னு மறையவர் வாழும் நாங்கைக் காவளம் பாடி மேய கண்ணனே களை கண் நீயே –4-6-1
பதவுரை Show / Hide
உலகம் முற்றும் தாவளந்து, Ulagam Mutrum Thaavalandhu - உலகமடங்கலும் தட்டித்தரிந்து (- (தாமரைப்பூ ஸம்பாதிப்பதற்காக))
தடம் மலர் பொய்கை புக்கு, Thadam Malar Poigai Pukku - பெரிதான பூக்களையுடைத்தான ஒரு தடாகத்தில் இறங்கி
அங்கு, Angu - அங்கு (முதலையினால் கவ்வப்பட்டு)
நா வளம் நவின்று ஏத்த, Naa Valam Navinru Aetha - நாவுக்கு அலங்காரமான திருநாமங்களை சொல்லித்துதிக்க
நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய், Naagaththin Nadukkam Theerththaa - கஜேந்திராழ்வானுடைய அச்சத்தை போக்கினவனே!,
மா வனம் பெருகி, Maa Vanam Perugi - மிக்க செல்வமானது அதிகமாகி
மன்னு, Mannu - பொருந்தியிருக்கப்பெற்ற
மறையவர் வாழும் நாங்கை, Maraiyavar Vaalum Naangkai - வைதிகர்கள் வாழ்ந்திருக்குமிடமான திருநாங்கூரில்
காவளம்பாடி மேய, Kaavalampadi Maeya - திருக்காவளம்பாடி யென்னுந்திருப்பதியில் நித்யவாஸம் பண்ணுகிற
கண்ணனே, Kannane - கண்ணபிரானே!
நீயே களைகண், Neeye Kalaikkan - நீயே ரக்ஷகனாகவேணும்….