திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1293 | பெரிய திருமொழி || (4-5–தூம்புடைப) (திருநாங்கூர்த் திருமணிக்கூடம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தனக்குப் போராத ஜன்மங்களிலே வந்து பிறந்து ரஷகன் ஆனவன் தானான நிலையிலே காணலாம் படி திரு மணிக் கூடத்திலே வந்து சந்நிஹிதன் ஆனான் என்கிறார்) 6 | கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் அரியும் மாவும்
அண்டமும் சுடரும் அல்லா ஆற்றலும் ஆய வெந்தை
ஒண் திறல் தென்னனோடே வடவரசு ஓட்டம் கண்ட
திண் திறலாளர் நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-6 | பதவுரை Show / Hideகெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் அரியும் மாவும், Kendaiyum Kurallum Pullum Kezhallum Ariyum Mavum - (ஆகிய இவ்வவதாரங்களை உடையனாய்) மத்ஸ்யமும் வாமநனும்ஹம்ஸ பக்ஷியும் வராஹமும் நரசிம்ஹமும் ஹயக்ரிவனும் (- (எவ்விடத்திலுள்ளானெனில்;) (நாங்கூர், திருமணிக்கூடத்தான்)) அண்டமும், Andamum - ப்ரஹ்மாண்டமும் சுடரும், Sudarum - ஸூர்ய சந்திரர்களும் அல்லா ஆற்றலும், Allaa Aatralum - மற்றுமுள்ள சிறந்த வஸ்துக்களும் ஆய, Aaya - தானேயாயிருக்கிற எந்தை, Endhai - எம்பெருமான் ஓண் திறல் தென்னன் ஓட, Oon Thiral Thenan Oda - மிக்கபலத்தை யுடையனான பாண்டியராஜன் தோற்று ஓடும்படியாகவும் வட அரசு ஓட்டம் கண்ட, Vada Arasu Oottam Kanda - பாண்டியதேசத்துக்கு வடக்கிலுள்ள சோளதேசத்துக்கு அரசனானசோழனைத் தோற்று ஓடும்படியாகவும் பண்ணின. திண் திறலாளர், Thin Thiralalar - மஹா பலசாலிகள் வாழ்கிற |