திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1244 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1244பெரிய திருமொழி || (3-10–திருமடந்தை) (திருநாங்கூர் அரிமேய விண்ணகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தேனுகன் பூதனை அவர்களை முடித்துப் பொகட்ட அழகில் வந்தால் காமனுக்கும் உத்பாதனாய் அள்ளல் அல்லாதபடி ஸ்ரமஹரமான திருமேனியை உடையனாய் இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் விரும்பி வர்த்திக்கிற தேசம் ஆயிற்று) 7
தீ மனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும் தேனுகனும் பூதனை தன் ஆர் உயிரும் செகுத்தான் காமனைத் தான் பயந்த கரு மேனி யுடை யம்மான் கருதும் இடம் பொருது புனல் துறைதுறை முத்து உந்தி நா மனத்தால் மந்திரங்கள் நால் வேதம் ஐந்து வேள்வியோடு ஆறங்கம் நவின்று கலை பயின்று அங்கு ஆ மனத்து மறையவர்கள் பயிலு மணி நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –3-10-7
பதவுரை Show / Hide
தீ மனத்தான் கஞ்சனது வஞ்சனையின் திரியும், Thee Manathaan Kanjanathu Vanjanaiyin Thiriyum - பொல்லாத நெஞ்சை யுடையனான கம்ஸனுடைய கபடச் செய்கைக் கிணங்க (கெட்ட எண்ணத்துடனே) திரிந்து கொண்டிருந்த
தேனுகனும் பூதனைதன் உம், Thenughanum Poodhanithan Um - தேநுகாஸூரனுடையவும் பூதனையினுடையவும்
ஆர்உயிர் செகுத் தான், Aaruyir Sekuth Than - நற்சீவனை முடித்தவனும்
காமனை பயந்தகரு மேனி உடை அம்மான், Kaamanai Bayandhakaru Meeni Udai Amman - மன்மதனை புத்தரனாகப் படைத்தவனும் கரிய திருமேனியை யுடையவனுமான ஸர்வேச்வரன்
புனல் பொருது துறை துறை முத்து உந்தி, Punal Poruthu Thurai Thurai Muthu Undhi - ஜலமானது அலையெறிந்து துறைகள்தோறும் முத்துக்களை தள்ளிக்கிடக்குமிடமாயும்
நாமனத்தால் மந்திரங்கள் நால் வேதம் ஆறு அங்கம் நவின்று, Namanathaal Manthirangal Naal Vedham Aaru Angam Navinru - நாவினாலும் மநஸ்ஸினாலும் (பகவானது) மந்த்ரங்களையும் நான்கு வேதங்களையம்ஆறு அங்கங்களையும் அப்யஸித்து
கலை பயின்று, Kalai Payinru - மற்றுமுள்ள சாஸ்திரங்களையும் அதிகரித்து
ஐந்து வேள்வி யோடு, Ainthu Velvi Yodu - பஞ்ச மஹா யஜ்ஞங்களோடு கூடி
அங்கு ஆம் மனத்து மறையவர்கள், Angu Aam Manathu Maraiyavarkal - ஆமுஷ்மிகத்திலேயே பொருந்தின நெஞ்சை யுடையரான வைதிகர்கள்
பயிலும், Payilum - நித்யவாஸம் பண்ணப்பெற்ற தாயுமுள்ள
அணி நாங்கூர், Ani Naangoor - திருநாங்கூரில்
அரிமேய விண்ணகரம், Arimeya Vinnakaram - வணங்கு